“தமிழ் எழுத்துக்களின் மறு மலர்ச்சிகள் 2008” என்னும் இவ்வாய்வு நூலில் தெளிவு படுத்தியுள்ள எழுத்துக்குறைப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் போன்ற கருத்துக்கள் செயலாக்கப்படவேண்டும்.

கருத்துக்களை மொத்தமாக ஒரே காலத்தில் செயலாக்கிவிட முடியாது. செயலாக்கவும் கூடாது இவற்றை மூன்று காலகட்டங்களாக பிரித்து செயல்படுத்தவேண்டும். எவ்வாறு என்றால் ஒவ்வொரு காலகட்டங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது கால இடைவெளி கொடுக்கப்பட வேண்டும்.

1.முதல் கட்ட நடவடிக்கைகள்

1. “ஆ” என்னும் ஆகார உயிர் நெடில் சீர்திருத்தம்
2. “ஈ” என்னும் ஈகார உயிர் நெடில் சீர்திருத்தம்
3. “ஊ” என்னும் ஊகார உயிர் நெடில் சீர்திருத்தம்
4. “ஏ” என்னும் ஏகார உயிர் நெடில் சீர்திருத்தம்
5. “ஐ” என்னும் அய்கார உயிர் நெடில் சீர்திருத்தம்
6. “ஔ” என்னும் அவ்கார உயிர் நெடில் நீக்கம்
7. “ஃ” அக் என்னும் ஆயுத எழுத்து நீக்கம்

இரண்டாம் கட்ட நடவடிக்கைகள்

8. முதல் எழுத்துக்கள் (30) முப்பதா?
9. இகர, ஈகார உயிர் மெய்யெழுத்துக்கள்
10. ஊகார உயிர் மெய்யெழுத்துக்கள் 10 சீர்திருத்தங்கள்.

மூன்றாம் கட்ட நடவடிக்கைகள்

மெய்யெழுத்துகள் மற்றும் உயிர் மெய்யெழுத்துக்கள் குறைப்பு.

11. “ங்” 12. “ஞ்” 13. “ண்” 14. “ற்” —–நீக்கம்

இத்துடன் புணரும் உயிர் மெய் எழுத்துக்கள் 48 நீக்கம்

4×12=48+4=52 எழுத்துக்கள் குறைப்பு.