• கால்டுவெல், வீரமாமுனிவர் காலம் முதல் இன்று வரை கல்விக் கூடம் அனைத்திலுமே ”ஐ” ”ஔ” ”ஃ” என்னும் இம் மூன்று எழுத்துக்களை தவறாகவே கற்றுத் தருகிறாராகள்.
  • ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவங்கள் ”ஐ – அய்”, ”ஔ – அவ்”, ”ஃ – அக்” இம்மூன்று வரிவடிவங்களும் ”அ” என்னும் அகரக் குறிலொலியை மீண்டும் மீண்டும் ஒலிப்பது சரியா?
  • உயிர் நெடிலெனப் பேரேற்று இரு எழுத்துக்கள் குறிலாக ஒலிக்கும் அவநிலை இருக்கலாமா? ”ஹ” – ”அய்” ”ஔ – அவ்” என்னும் ஐகார நெடில், ஔகார நெடில் இவையிரண்டும் இரண்டு மாத்திரை அளவு நெடில் ஒலி எழுப்புகிறதா? இல்லவே இல்லை.
  • குறிலொலி மற்றும் வரிவடிவம் இல்லாது எப்படி நெடில் ஒலிகள் மற்றும் வரிவடிவங்கள் வரமுடியும்? ”ஐ – அய்”, ”ஔ – அவ்” நெடிலென எப்படி ஏற்பது? இதன் குறில்கள் என்னவாயிற்று?
  • ”ஃ” அக்கென்னும் இவ்வரிவடிவம் மும் முற்றுப்புள்ளிகளே! வரிவடிவமே இல்லாது., எழுத்தென்று எப்படி ஏற்பது?
  • வார்த்தையை எழுத்தென்று எப்படிக் கூறலாம்?
    உதாரணமாக ”உ + ள = ஊ”, ”ஓ + ள = ஔ” இவைகள் இரண்டுமே வார்த்தைகள். எழுத்தென்று எப்படி ஏற்பது?
  • குறிலின் ஒலியைத் தழுவும் நெடில், குறிலின் வரிவடிவைத் தழுவாதது ஏன்? ”இ – ஈ”, குறிலொத்த வரிவடிவம் இல்லையே!
  • ஒரு உயிர் எழுத்து என்று பேரேற்று இரு வரிவடிவங்களுடன் இரு எழுத்துக்களின் கூட்டொலியை ஒலிக்கலாமா? ”ஐ – அய்” ”ஔ – அவ்” ”உ + ள = ஊ” போன்ற வரி வடிவங்கள் முறை கேடுடன் ஒலிக்கின்றன. ஓர் உயிர் ஈருடல் புகலாமா? மரபு மீறிய செயலல்லவா?
  • உயிரெழுத்துக்களில் உயிர் மெய்யெழுத்துக்களின் கலவை எப்படி வரலாம்? ”ஊ”, ‘ஔ”, ”ஐ” இரு எழுத்துக்களின் கூட்டொலி.
  • தனக்கென உண்மையான ஒலியே இல்லாது மற்ற எழுத்துக்களின் ஒலிகளைத் திருடும் அவல நிலை செம்மொழியில் இருக்கலாமா? ”ஐ – அய்” ”ஔ – அவ்” ”ஃ – அக்” (ஐ, ஔ, ஃ), இம்மூன்றும் அகரக்குறிலொலியையும் க், ய், வ் என்னும் மெய்யொலிகளையும் திருடுகிறது.
  • முதலெழுத்துக்கள் முப்பதா?