• இகர, ஈகார உயிர்மெய்யெழுத்துக்கள் அனைத்திலுமே குறில் குறிகள் மற்றும் நெடில் குறிகளாக மேல் விலங்கு இணைக்கப்பட்டுள்ளது.
  • ஊகார நெடிலுடன் புணரும் உயிர் மெய் எழுத்துக்களின் நெடில் குறிகள் ஒழுங்கற்று, பல கோணங்களில், பல திசைகளில், பலவிதமான நெடில் குறிகளுடன் தன்னிச்சையாகச் செயல் படுகின்றன.
  • உயிர் மெய்யெழுத்துக்களில் பயன்படாத எழுத்துக்கள் மிகுதியாக உள்ளது. எழுத்துச் சுமை தேவையா?
  • உயிர் மெய்யெழுத்து என்று பேரேற்று, இரண்டு மூன்று வரிவடிவங்களைப் பெற்று வார்த்தைகளாக காட்சியளிப்பது பெரும் குறையாகவேக் கருதுகிறேன். (கெ, கே, கொ, கோ, கௌ)

மேற்காணும் குறைபாடுகளைப் போக்கி தூய தமிழாக, கசடற, செம்மொழியாக, எழுத்துக்குறைப்பையும் கையாண்டு படைக்கப் பட்ட தமிழ் எழுத்துக்களின் மறுமலர்ச்சிகள் 2008 (The Renaissence of Tamil Letters – 2008) என்னும் இந்த ஆய்வு நூலின் மூலம் சில ஆய்வுகளையும், சீர்திருத்த முறைகளையும் அறிமுகம் செய்கிறேன்.

”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

எனத் திருக்குறளின் கூற்றின்படி கசடற, குற்றமற கற்போம்,
கற்ற கல்விக்கு தக்கவாறு நன் நெறியில் நிற்போம்.

தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்து, தமிழ்ப் பாலருந்தி, தமிழ் மண்ணில் நடைபோடும் நான், என் தாய்மொழி தமிழுக்கு மகனாற்றும் கடமையாய் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களுடன் ”தமிழ் எழுத்துக்களின் மறுமலர்ச்சிகள் 2008” என்னும் இவ்வாய்வுநூலை வெளியிடுகிறேன். மேலும் தமிழ் எழுத்துக்களில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி வைத்த தமிழ் மொழிச்சீர்திருத்தப் பணிகளையும், அவர், இளைத்த தமிழனுக்கு இட்ட ஆணையையும் நிறைவேற்றிவிட்டதாக எண்ணி, மன மகிழ்வோடு இப்பணியை நிறைவு செய்கிறேன்.

ஆசிரியர்.