ஆயுத எழுத்து நீக்கம்

“ஃ” அக் என்ற வரிவடிவத்தை ஆயுத எழுத்தாக நாம் நடைமுறையில் பயன்படுத்துகிறோம். இது தமிழ் எழுத்தின் வரிவடிவம் அல்ல, இச்சொல் வட மொழிச் சொல். சமஸ்கிருதம் என்ற வடமொழயில் “ஆச்ரிதம்” என்ற சொல்லின் திரிபு என ஜி.யு.போப் அவர்கள் கூறுகிறார். வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் மூன்று புள்ளிகளை, நச்சினார்க்கினியர் சமஸ்கிருதத்தில் மூன்று புள்ளிகளை, நச்சினியார்க்கினியர் காலத்தில் பயன்படுத்தினார்கள் என்று வித்வான் மு. இராகவையங்கார் தம் நூலில் எழுதியுள்ளார்.

அசோகர் காலத்தில் பாலி எழுத்துக்களில் மூன்று புள்ளிகளையுள்ள “ஃ” வடிவடிவம் “இ” இகரமாகப் படிக்கப்பட்டது என்று திரு.டி.ஏ. கோவிந்தராவ் கூறுகிறார்.

தொல்காப்பியன் ஆயுத எழுத்தைச் சார்பெழுத்தாகச் சுட்டிக் காட்டுகிறார். அவை:

“குற்றிய லிகரம், குற்றியலுகர மாய்தமென்ற
முப்பாற் புள்ளியு மெழுத்தோரன்ன”

(தொலகாப்பியம் எழுத்து அதிகாரம் – 1)

1. பாண்டிய நாட்டு தமிழ் வட்டெழுத்துகளில் 12- ஆம் நூற்றாண்டு வரை “ஃ” மற்றும் “ஔ” என்ற இரண்டு வரிவடிவங்கள் இல்லை.

2. சேர நாட்டிலுள்ள தமிழ் வட்டெழுத்துக்களில் 17 – ஆம் நூற்றாண்டு வரை “ஃ,ஔ” என்ற இரண்டு வரி வடிவங்களும் இல்லை.

3. சோழ நாட்டுத் தமிழ் வட்டெழுத்துக்களில் 8 -ஆம் நூற்றாண்டு வரை “ஃ -ஔ” என்ற இரண்டு வரிவடிவங்களும் இல்லை.

4. இது போன்ற வரிவடிவம், சதவாகனர் காலத்திலும், பல்லவர்கள் ஆட்சியின் ஆரம்பகால சாஸனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றுரைக்கிறார். திரு. சிவராம்மூர்த்தியவர்கள்.

5. Travancore Archelogical Series Vol. XIV, Page 213, Mr. T.A. Govintha Rao

6. Indian Epigrahy and South Indian Scripts by C. Sivaramamurthy, M.A.,

ஆனால் க், ங், ச், ஞ் என்ற மெய்யெழுத்து 18 பதினெட்டும் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஃ, ஔ, கௌ, சௌ, ஞௌ, போன்ற உயிர் மெய்களும் இடம் பெறும் போது ஃ அக் மட்டும் ஏன் இடம் பெறவில்லை? என்பதே கேள்வி?

ஃ – அக் என்னும் ஆய்தம் வரிவடிவம்

இன்னும் கூறினால் அக்கின் – ஃ வரிவடிவை மூன்று நிறுத்தல் குறிகள் என்றே கூற வேண்டும். இந்த மூன்று நிறுத்தல் குறிகளினால் அக் என்ற ஒலியை எப்படி எழுப்ப முடியும்? அகரத்தில் மலர்ந்து மெய்யில் முடியும் ஒலியல்லவா? இந்த அகரவொலியை மூன்று புள்ளிகளால் எழுப்பச் சாத்தியமில்லை.

ஃ – அக் என்ற ஒலியை, மூன்று நிறுத்தல் குறி அல்லது மூன்று முற்றுப் புள்ளிகள் எழுப்புகின்றன, என்று ஒரு சொல்லுக்கும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அகர வரிவடிவமாவது பெற்றிருக்க வேண்டும்! அதுவுமில்லை. விட்டுவிடுவோம். சரி “க்” என்ற மெய்யின் வரிவடிவச் சாயலையாவது பெற்றிருக்கிறதா? அதுவுமில்லை. பிறகு எவ்வாறு இது தமிழ் எழுத்து என்று நம்புவது? பின் எவ்வாறு “அக்” என்ற ஒலியை எழுப்புகின்றது? மூன்று நிறுத்தல் குறிகள்தான். அக் என்ற ஒலியை எழுப்பும் வரிவடிமல்ல. 11ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு “ஐ” என்னும் ஐகாரம் “ஔ” என்னும் ஔகாரம். “ஃ” அக் என்னு ஆயுதம் ஆகியவைகள் ராஜராஜசோழன் காலத்தில் தமிழகத்தில் புகுத்தப்பட்டு பரவலாக்கப் பட்டவைகள் எனலாம். இவைகள் தமிழ் மொழிக் கலவைகள். ஃ சமஸ்கிருதம் வழி வந்தது. “ஐ”, “ஔ” இரண்டும் பல்லவர்களின் “பிராமிலிபி” என்ற மொழியின் வழி வந்தவைகள். இவற்றின் ஒலிகளை மட்டும் எடுதுக்கொண்டு, எழுத்தின் வரிவடிவத்தினை நீக்குகிறேன். வரிவடிவமே இல்லாத்துமான மும்முறுப்புள்ளியை எழுத்து என எப்படி ஏற்பது? ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஒலித்திருடன்

தனக்கென்று ஒரு வரிவடிவமுமின்றி, ஒலிவடிவமுமின்றி, ஆயுத எழுத்தென்று பெயர் எப்படி வந்தது? இது எழுத்தே அல்ல! மும் முற்றுப் புள்ளிகளே! அன்று எவரோ சொன்ன பொய்யை, செய்த தவறை, இன்று வாழையடி வாழையாய், நாமும் செய்து வருகிறோம் என்றால் நம் அறியாமையா? இல்லை மடமையா? தனக்கென ஒரு ஒலியே இல்லாது, “அ” என்னும் அகரத்தின் ஒலியையும் “க்” என்னும் மெய்யின் ஒலியையும் திருடுகிறது. இது ஒரு பக்கா திருடன். இதை நீக்கியே தீர வேண்டும். வரிவடிவோ, ஒலிவடிவோ இல்லாத “ஃ” அக் என்னும் ஆயுத்த்தை நீக்குகிறேன். பயன்படாமல் ஒதுக்கி வைத்துள குப்பையாகக் கருதுங்கள்.

“ஃ” அக் என்னும் ஆயுதம் நீக்கம்

(ஃ) அ+க் = அக்

இழப்பை ஈடு செய்யும் முறை

1. அஃது = அக்து
2. இஃது =`இக்து
3. எஃகு = எக்கு

என எளிமையில் எழுதப் படிக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளவும்