இகர, ஈகார உயிர்மெய்யெழுத்து

14. இகர, ஈகார உயிர்மெய்யெழுத்துக்களின் குறில் மற்றும் நெடில் குறிகள் மாற்றம்

இகர, ஈகார உயிர்மெய்யெழுத்துக்கள் ஒழுக்கமுடன், ஒரே சீரான வரிவடிவங்களுடன் அழகாக அமைந்துள்ளன. எழுத்துக்களின் குறில் மற்றும் நெடில் குறிகள் ஒற்றுமையுடன் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் குறில், நெடில் குறிகளாக மேல் விலங்கு கீழ் மாட்டப்பட்டு, சீரற்றுக் காணப்படுகின்றன.

குறிப்பாகச் சொல்லப்போனால் இகரக் குறிலொலி யெழுப்பும் உயிர்மெய்கள் 18ம், ஈகார நெடிலொலி யெழுப்பும் உயிர்மெய்கள் 18ம், ஆக முப்பத்தியாறு உயிர்மெய்யெழுத்துக்களும் அதன் குறில் மற்றும் நெடில் குறிகளும் சீர்திருத்தம் பெற வேண்டியவைகளே!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தமிழ் எழுத்துக்களில் குறிப்பாக உயிர்மெய்யெழுத்துக்களில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ளார். அரசும் ஏற்று அங்கீகாரம் அளித்தது. எழுதக் கடினமாக இருந்தவைகளை சுலபமாக்கினார். மேலும் நெடில் குறிகளை ஒழுங்குபடுத்தி குறிகளின் இன ஒற்றுமையை நிலை நாட்டினார். அவர் விட்டுச் சென்ற எழுத்துச் சீர்திருத்தப் பணியை நான் மேற்கொள்கிறேன்.

இகரக் குறில் மற்றும் ஈகார நெடிலில் உயிர்மெய்களின் வரிவடிவங்களில் குறில் குறி, நெடில் குறிகளாக மேல் விலங்குகள் மாட்டப்பட்டுள்ளன. அவ்வெழுத்துக்களுக்குச் சுதந்திரம் அளிக்கும் வகையில் அவறின் அனைத்து மேல் விலங்குகளையும் நீக்கி மாற்று முறையில் குறில் மற்றும் நெடில்குறிகளை அறிமுகம் செய்கிறேன்.

இகர, ஈகார உயிர்மெய் 36 எழுத்துக்களுமே மேல்விலங்குகள் மாட்டப்பட்டுள்ளது. மேல் விலங்குகளை நீக்கி விட்டு வேறு விதமான குறில் மற்றும் நெடில் குறிகளை இணைத்து மாற்றம் காண்கிறேன்.

அச்சுப்பதித்தல், தட்டச்சுமுறை, மற்றும் கணினி முறைகளுக்கு ஏற்றாற்போலும், குறில் மற்றும் நெடில் குறிகளின் இன ஒற்றுமையை நிலை நாட்டும் வகையிலும் ஓர் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்கிறேன். இச் சீர்திருத்தங்களாக இகர உயிர்மெய்களும், ஈகார உயிர்மெய்களும் சீர்பெறும் என நம்புகிறேன்.

இகர, ஈகார உயிர்மெய்களின் குறில் மற்றும் நெடில் குறிகளின் மாற்றங்கள்

அட்டவணை