இதுவரை தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் மற்றும் குறிகளின் மாற்றங்களைக் கண்டோம். இனித் தமிழ் எழுத்துக்களில் குறைப்பு (அ) நீக்கங்களைக் காண்போம்.
நீக்கப்பட்ட எழுத்துக்களின் பட்டியல்:
அட்டவணை:
தமிழ் எழுத்துக்கள் குறைப்பு (அ) நீக்கங்கள்
தமிழ் எழுத்துக்களில் தேவையற்ற மற்றும் பயன்றற எழுத்துக்கள், குவியல்கள் குவியல்களாக குவிந்து கிடக்கின்றன. ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு வீதம் பயன்படாத, பயன்படுத்தப்படாத எழுத்துக்கள் பெரும் சுமையாக உள்ளன. இதைத் தமிழ் பயின்ற அனைவரும் அறிவார்கள். தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத பாமர மக்களுக்குத் தமிழ் பேசத் தெரியுமே தவிர தமிழ்மொழி எழுத்துக்களில் உள்ள இடர்பாடுகள், குழப்பங்கள், தவறுகள் போன்ற சூழல்கள் தெரியவாய்ப்பில்லை. தமிழ்மொழியை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்துப் பட்டம் பெற்ற அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் தெரியாத்து போல் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
16. மெய்யெழுத்துக்கள் மற்றும் உயிர்மெய்யெழுத்துக்கள் குறைப்பு
“மெய்யினியற்கை புள்ளியோடு நிலையல்”
(தொல்காப்பியம் – 15)
தொல்காப்பியரின் கூற்றுப்படி மெய்யெழுத்துக்கள் எல்லாமே புள்ளியுடன் இருக்க வேண்டும். ஆனால் பாண்டிய நாட்டுத் தமிழ் வட்டெழுத்துக்களில், மெய்யெழுத்துக்கள் புள்ளியுடனும் புள்ளி இலாமலுமுள்ளன. சேர நாட்டுத் தமிழ் வட்டெழுத்தில் புள்ளியுள்ள மெய்யெழுத்துக்கள் வழக்கிலிருந்து வந்தள்ளது தெளிவாகிறது. தற்காலத் தமிழ்மொழியில் மெய்கள் அனைத்துமே புள்ளிகள் பெற்று, ஒரே சீரான எழுத்தொழுங்கு பெற்று அழகாகக் காட்சியளிக்கின்றன. இந்த மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களோடு புணர்ந்து பல உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாக்க் காரணியாக அமைகிறது. நமது தமிழ்மொழியில் இருந்து வரும் உயிர்மெய்கள் 216 (இருநாற்றிப் பதினாறு) மே மெய்யின் அடிப்படையில், உயிரின் உதவியுடன் உயிர்மெய்களாக மலர்கின்றன.
மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் புள்ளியுடன், எழுத்தொழுங்கு மற்றும் எழுத்தொற்றுமயை நிலைநாட்டுகின்றன என்பதில் ஒரு சிறிதும் அய்யமில்லை. மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை, உயிரெழுத்துக்களின் எண்ணிக்கையை விடச் சற்று அதிக அளவிலுள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் மெய்யெழுத்துக்களில் தேவையற்ற மிதமிஞ்சிய, பயன்படாத எழுத்துக்களும் உள்ளன.
“ங்” – ஙகரம் மற்றும் “ஞ்” ஞகரம்
“ங்” என்னும் ங்கரம் மற்றும் “ஞ்” என்னும் ஞகரம், ஆகிய இரு மெய்களையும் இதனுடன் மலரும் ஙகர உயிர் மெய்கள் 12, ஞகர உயிர்மெய்கள் 12=24=2 ஆக மொத்தம் 26 (இருப்பத்தாறை)யும் தேவையற்ற எழுத்துச்சுமைகளாகக் கருதுகிறேன். ஓரிரு எழுத்துக்களை தவிர மற்றுமுள்ள பெரும்பான்மையான எழுத்துக்கள் பயன்படாமல், உதவாக்கரையாக இருப்பதை நீங்களும் அறிவீர்கள். ஆகவே இவ்விரு இன எழுத்துக்கள் அனைத்தும் நீக்குகிறேன்.
“ந்,ண், ன் மூன்று நகரங்கள்”
“ந்”, “ண்”, “ன்” ஆகிய மூன்று நகர மெய்கள் உள்ளன. மூன்று நகர ஒலிகளும், வரிவடிவங்களும் தேவைதானா? ஒரு சிறிதேனும் எழுத்துச்சுமையை குறைக்கலாம் என்பதே எனது நோக்கம். இவற்றில் “ந்” “ன்” என்னும் இரண்டு நகர மெய்யெழுத்துக்களைப் பயன்படுத்திக் கொண்டு “ண்” என்னும் மூன்று சுழி ணகரத்தையும் இதனுடன் உறவாடும் 12 (பன்னிரண்டு) ணகர உயிர்மெய்களையும் நீக்குகிறேன்.
“ர்” மற்றும் “ற்” இரண்டு ரகரங்கள்
ரகரத்தை எடுத்துக் கொண்டால் “ர்” “ற்” என்னும் இரு ரகர மெய் வரிவடிவங்கள் உள்ளன. இவைகளில் “ர்” என்னும் ரகர மெய்யைப் பயன்படுத்திக் கொண்டு “ற்” என்னும் றகர மெய்யையும் இதனுடன் நேசக்கரம் நீட்டும் 12 (பன்னிரண்டு) றகர உயிர்மெய்களையும் நீக்கி எழுத்துச் சுமையைக் குறைக்கின்றேன். மொத்தத்தில் “ங்”, “ஞ்”, “ண்”, “ற்” என்னும் 4 (நான்கு) மெய்யெழுத்துக்களையும், இவற்றின் உயிர்மெய்களாகிய 48 (நாற்பத்தி எட்டு) எழுத்துக்களையும், மொத்தம் 48 + 4 = 52 எழுத்துக்களைக் குறைத்து எழுத்துச் சுமைகளைப் போக்குகிறேன். நம்மிடமுள்ள பிற எழுத்துக்களின் உதவியுடன் இவ்விழப்பை ஈடுசெய்யமுடியும்.
1. “ங்” என்னும் ங்கரமெய்யும், ங்கர உயிர்மெய்களும்
“ங்” என்னும் வரிவடிவம், ங்கர மெய்யாக வரிவடிவம் பெற்று ஒலிக்கிறது. இதன் உயிர்மெய்யெழுத்துக்கள் ங, ஙா,ஙி,ஙூ, ஙெ,ஙே,ஙொ,ஙௌ என்னும் 12 (பன்னிரண்டு) எழுத்துக்களும் ஙகர எழுத்தினத்தில் பொம்மைகள் போல் செயலற்று அமைந்துள்ளன. பயன்படாத எழுத்துக்களாகவே உள்ளன. இங்கு நாம் எல்லோருமே சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த 12(பன்னிரண்டு) எழுத்துக்களும் தமிழ் மொழியில் பயன்படுகிறதா? பயன்படவில்லை. உருவாகும் 12 வித ஒலிகளுமே பயன்படவில்லை. ஆகவே ஙகர இனவெழுத்துக்கள் மொத்தம் 13 (பதிமூன்றையும்) தமிழ் நெடுங்கணக்கிலிருந்து நீக்குகிறேன். மேலும் ஙகர இனவெழுத்துக்கள் உபயோகமின்மையின் காரணமாகத் தன்னைத் தானே ஒழித்து, அழித்து, மறைந்து கொண்டே வருகிறது. என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
இழப்பை ஈடு செய்யும் முறைகள்
1. இங்ஙனம் – இங்கனம் – இன்கனம்
2. அங்ஙே – அங்கே – அன்கே
3. இங்ஙே – இங்கே – இன்கே
4. எங்ஙே? – எங்கே? – என்கே?
5. மங்ஙை – மங்கை – மன்கய்
6. நங்ஙை – நங்கை – நன்கய்
7. தங்ஙை – தங்கை – தன்கய்
8. கொங்ஙை – கொன்ஙை – கொன்கய்
9. செங்ஙை – செங்கை – சென்கய்
10. புங்கை – புங்கை – புன்கய் என மாற்றலாம்.
மேல்காணும் வரிவடிவங்களை உற்றுநோக்குங்கள். இவ்வெழுத்துக்கள் பழந்தமிழ் வழக்கிலிருந்து, பயன்படாத காரணத்தால் தன்னைத்தானே அழித்து மறைந்து மாற்று வரிவடிவங்களைப் பெற்றுவருவது தெளிவாகும். அவ்வாறே இம்மாற்று முறையை நான் அறிமுகம் செய்கிறேன்.
மேல்காணும் மாதிரிகளைப் போல், எழுதப் படிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டால், இழப்புகள் ஏதுமில்லை. ஙகர இனமே ஒழியும். எழுத்து சுமையும் குறையும்.
II. “ஞ்” என்னும் வரிவடிவம் ஞகர மெய்யாக வரிவடிவம் பெற்று புள்ளியுடன் காட்சியளிக்கிறது. இதன் உயிர்மெய்யெழுத்துக்களாகிய ஞ,ஞா,ஞி,ஞீ,ஞு,ஞூ,ஞெ,ஞே,ஞை,ஞொ,ஞோ,ஞௌ,ஞ் என்னும் 13 (பதிமூன்று) எழுத்துக்களில் “ஞ்” “ஞா” என்ற ஈரெழுத்தைத் தவிர மற்றவைகள் பயன்றற பதுமைகளே’ இருப்பினும் இந்த வர்க்க முழு எழுத்துக்களையும் பயன்படாத, குப்பையாகக் கருதி அப்புறப்படுத்துகிறேன்.
இழப்பை ஈடு செய்யும் முறைகள்
இன்று நாளை
1. ஞாயிறு – நாயிறு
2. அஞ்சுகம் – அன்சுகம்
3. தஞ்சம் – தன்சம்
4. பஞ்சம் – பன்சம்
5. கொஞ்சு – கொன்சு
6. வஞ்சி – வன்சி
7. நஞ்சை – நன்சய்
8. மஞ்சள் – மன்சள்
9. இஞ்சி – இன்சி
10. அஞ்சி – அன்சி என எழுதலாம்.
ஞகர மெய் மற்றும் ஞகர உயிர்மெய்யெழுத்துக்கள்
நீக்கம் 1+12 = 13 எழுத்துக்கள்
ஞ்.ஞ,ஞா,ஞி, ஞீ, ஞு,ஞூ,ஞெ,ஞே, ஞை, ஞொ, ஞோ, ஞௌ
III. “ந்” “ண்” “ன்” என்னும் ணகர மெய்கள் மற்றும் ணகர உயிர்மெய்களும்
நகரத்தை எடுத்துக் கொண்டால் ஒரே குழப்பம். ஒரு ஒலி எழுப்புவதற்கு மூன்று மாறுபட்ட வரிவடிவினைக் கொண்ட மெய்யெழுத்துக்கள். மூன்று மெய்யொலிகளுமே “ந்” “ண்” “ன்” என ஓரொலியைத் தானே எழுப்புகின்றன. ஓரொலியை எழுப்ப மூன்று வரி வடிவங்கள் வெவ்வேறு வரிவடிவங்களைக் கொண்டு செயல்படுகின்றன. இந்த மூன்று மெய்களுடன் நேசக்கரம் நீட்டும் உயிர்மெய்கள் 36(முப்பத்தி ஆறு), மெய்களைச் சேர்த்தால் மொத்தம் 39 (முப்பத்தி ஒன்பது), நன்கு சிந்தியுங்கள். இவைகள் எழுத்துச் சுமையாக தோன்றவில்லையா? பெரும் சுமையிலிருந்து ஒரு சிறுசுமையாவது குறைக்கக்கூடாதா?
“ண்” “ந்” “ன்” இந்த மூன்று நகர மெய்களில் கடினமானதை போக்கிவிட்டு எளிய, சுலபத் தன்மை கொண்ட இரு மெய்யைத் தேர்வு செய்கிறேன். “ந்” என்னும் நகர மெய்யும் இதனுடன் சாரும் 12 நகர உயிர்மெய்களும் என்றும் போல் இன்றும் இருந்து செயல்படட்டும். குழப்பத்தை உருவாக்கக்கூடியதும் எழுதப்படிக்கத் கடினமானதுமான, மூன்று சுழி கொண்ட “ண்” என்னும் ணகரத்தையும், ணகர உயிர்மெய்யெழுத்துக்கள் பன்னிரெண்டையும் மொத்தம் 13 (பதிமூன்று), எழுத்துக்களை குறைத்து எழுத்துச்சுமையிலிருந்து விடுபட்டு மொழியை எளிமையாக்குகிறேன். ணகர மெய்யாகிய “ண்”னும் சில ணகர உயிர்மெய்களும் தான் பயன்படுகின்றன. பெரும்பான்மையாக உயிர்மெய்கள் பயன்படாமல் தேவையற்ற குப்பைகளாக இருந்து கொண்டு எழுத்துச் சுமையை கூட்டுகின்றது. ஆகவே அவற்றை அகற்றுகிறேன்.
“ந” நகரமே பழமையானது, தொன்மை வாய்ந்தது. பிற நகரங்களாகிய “ன” “ண” என்னும் னகரங்கள், நகரத்தின் திரட்சியினால் உருவானவைகள் எனத் தேவநேயப் பாவாணர் கருதுகிறார். அவர் கருத்தையே நானும் ஏற்கிறேன். “” என்னும் நகரமே னகரமாகும், ணகரமாகவும் மருவின. மேலும் ணகரத்தின் பணியையே ணகரம் ஆற்றுவதால் “ண” என்னும் மூன்று சுழி ணகரத்தை நீக்கி “ந” என்னும் நகரத்தையும் “ன” என்னம் இரு சுழி னகரத்தையும் கையாள்வோம்.
இழப்பை ஈடு செய்யும் முறைகள்
இன்று நாளை
1. ஆண் – ஆன்
2. அண்ணா – அன்னா
3. எண்ணம் – என்னம்
4. பணம் – பனம்
5. ஆண்டவன் – ஆன்டவன்
6. அணில் – அனில்
7. தண்ணீர் – தன்னீர்
8. வெண்ணீர் – வென்னீர்
9. அண்ணி – அன்னி
10. பெண் – பென் என மாற்றலாம்.
மூன்று சுழி ணகரம் வருமிடங்களில் இரண்டு சுழி னகரங்களைப் பயன்படுத்துக்கள்
ணகர மெய், ணகர உயிர்மெய்யெழுத்துக்கள்
1+12 = 13 எழுத்துக்கள் நீக்கம்.
ண், ண, ணா, ணி, ணீ, ணு, ணூ, ணெ, ணே, ணொ, ணோ, ணௌ.
IV. “ர்” “ற்” என்னும் ரகரமெய்களும், ரகர உயிர்மெய்களும்
ரகரத்தில் “ர்”, “ற்” என்னும் இரு மெய்களும் ஒரு ஒலியைத்தான் எழுப்புகிறது. ஒரு ஒலியை எழுப்பும் இரு வரிவடிவங்களாக இரு மெய்களும் அமைந்துள்ளன. ரகர ஒலி எழுப்ப ஒரு ரகரம் போதுமே! பிறகு ஏன் இரண்டு ரகரங்கள்? ஒன்றன் வேலையை மற்றொன்று செய்து கொண்டுதான் ஒலிக்கிறது. இருப்பினும் இரு வரிவம் தேவையா? என்பது தான் எனது கேள்வி.
தேவநேயப் பாவாணரின் கூற்றின்படி பார்த்தால் “ர” ரகரமே பழமை வாய்ந்தது. ரகரம் திரண்டு “ற” றகரமாக உருவானது என்றே பொருள் கொள்ள வேண்டும். ரகரம் முன் தோன்றிப் பின்தோன்றிய றகரமாக “ற” என்ற உரு ஒலிக்கிறது. ரகரம் திரண்டு றகரமாகியது என பாவாணர் உறுதி கொள்கிறார். முன்தோன்றிய “ர” ரகத்தைக் கையாள்வோம். “ற” என்ற றகத்தைப் போக்குகிறேன்.
எடுத்துக்காட்டு:
அரு – அறு; ஒளிரு – ஒளிரு; முரி – முறி எனத் திரண்டன. நம் தமிழ்மொழியில் இரண்டு ரகரங்கள் ஒலிப்பது, தேவைக்கு மிஞ்சிய ஒன்றாக்க் கருதுகிறேன். ரகரத்தை உருவாக்கும் வல்லமை “ற” என்னும் றகரத்திடம் இல்லை. ஆனால் “ற” என்னும் றகரத்தை உருவாக்கும் வல்லமை “ர” என்னும் ரகத்திடம் உள்ளது என்பதே உண்மை. மேலும் நமது மொழியில் இரு ரகங்கள் ஒலிப்பது அளவிற்கு மிஞ்சி, அதிகமாக வளர்ந்த ஊளைச்சதை போல் தோன்றுகிறது. ஆகவே இரண்டு, ரகரங்களில் ஒன்றை “ர” வை கையாள வைத்துக்கொண்டு மற்றொரு “ற” என்னும் றகத்தை தேவையற்றக் குப்பையாக எண்ணி நீக்குகிறேன். தமிழ் எழுத்துக்களில் உள்ள எழுத்துச் சுமையைக் குறைக்கிறேன். றகரத்தில் ஓரிரு எழுத்துக்களைத் தவிர மற்ற பெரும்பான்மையான எழுத்துக்கள் பயன்படாதவைகள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகவே இவ்வினத்தையே நீக்குகிறேன்.
“ற” றகர இழப்பை ஈடு செய்யும் முறை
இன்று நாளை
1. குற்றம் – குட்ரம்
2. ஏறு – ஏரு
3. சுற்றம் – சுட்ரம்
4. மாறு – மாரு
5. போன்ற – போன்ர
6. வேற்று – வேட்ரு
7. மேற்கு – மேர்க்கு
8, மாற்று – மாட்ரு
9. ஏற்றம் – ஏட்ரம்
10. வேற்று – வேட்ரு
“ற” என்னும் றகரம் கையாளப்பட்ட அனைத்து இடத்திலுமே “ர” என்று ரகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
“ற” என்னும் றகர மெய் மற்றும் றகர உயிர்மெய் நீக்கம்
1+2 = 13 எழுத்துக்கள்
ற் – ற, றா, றி, றீ, று, றூ, றெ, றே, றை, றொ, றோ, றௌ
“ஐ” என்னும் அய்காரம்
அகரக்குறிலொலி தொடக்கத்தில் முளைக்க
ய், யென்னும் மெய்யோ! இறுதியில் முடிக்க
அய்யென்னும் ஒலியை இவ்வுரு “ஐ” யோ!
ஒலிப்பதும் முறையோ வரிவடியேற்றலும் சரியோ!
குறிலொலி வரிவடிவு யேதுமேயின்றி
“ஐ” எனவொலிக்கும் நெடிலய்காரம்
ஒலியுடன் ஒவ்வா வரிவடிவினையேற்று
இயம்பலும் முறையோ! ஏற்பதும் சரியோ!
“ஐ” யென்னும் காரத்தை அடியோடு நீக்கி
அதனுடன் புணரும் அனைத்துமே போக்கி
களை நீக்கித் தமிழ் காத்தலும் சரியே!