முதலெழுத்துக்கள்

17. முதலெழுத்துக்கள் முப்பதா?

இல்லை! இல்லவே இல்லை!! ஒருக்காலும் ஒத்துக்கொள்ளவே முடியாது. முதலெழுத்துக்கள் முப்பது அல்ல இருபத்தி இரண்டு மட்டுமே.

உயிர் – 10 + மெய் – 12 ஆக உயிரும் மெய்யும் இருபத்தி இரண்டே! இருபத்தி இரண்டு மட்டுமே!

தொல்காப்பியரின் பொய்க் கூற்று

உயிரும் மெய்யும் முப்பதும் முதலே! என்கிறார் தொல்காப்பியர். அவர் கூற்று உண்மையா? அல்லது பொய்யா? என்பதே என் வாதம். அவர் கூற்றுப்படி, முப்பதும் முதலாக இருந்தால் அந்த முப்பதுமே முதல் எழுத்துக்களாகப் பயன்பட வேண்டும். பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆறு எழுத்துக்களுக்கு தமிழ் அகராதியில் இடமில்லையே ஏன்? உங்கள் சிந்தனையைத் தூண்டி விடுங்கள். நன்கு மனதை ஒரு நிலைப்படுத்தி சிந்தித்துப் பாருங்கள் உண்மை எது, பொய் எதுவென்று நீங்களே உணர்வீர்.

உங்கள் சிந்தனைக்கு

உதாரணமாக, “ங, ண , ழ, ள, ற, ன” ஆகிய ஆறு எழுத்துக்களும் முதல் எழுத்துக்களா? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். இவைகள் நம் தமிழ்மொழியில் முதல் எழுத்துக்களாய்ப் பயன்படுகின்றனவா? என்பதே என் கேள்வி. பயன்படும் முதலெழுத்துக்கள் தான் என்று ஒருவேளை நீங்கள் கருதினால் அவ்வெழுத்துக்கள் முதலெழுத்தாய் பயன்படும். வார்த்தைகள் என்ன? என்ன?. வார்த்தைகளில் சார்பெழுத்துக்களாகப் பயன்படுகிறதேயொழிய முதலெழுத்தாகப் பயன்படும் வார்த்தைகள் எவை? எவை? ஏன் தமிழ் ஏடுகளிலும், இலக்கியங்களிலும் பயன்படவில்லையா? தமிழகராதியில் இடம் பெறாமைக்குக் காரணம் என்ன? என் வினாவிற்கு விடையளிக்க தொல்காப்பியரே உளருவார். என் வினாவிற்கு ஏதும் விடையளிக்க நீங்கள் துணிந்தால் உங்களுக்குத் தெரியும் உண்மை எது? சரி என்று அதை தயக்கமின்றி கூறுங்கள்.

முதல் எழுத்துக்கள்

முதலெழுத்துக்கள் முப்பது அல்ல. இருபத்தி இரண்டே! உயிரெழுத்துக்கள் 10 (பத்து), மெய்யெழுத்துக்கள் 12 (பன்னிரண்டு, ஆக மொத்தம் இருப்பத்தி இரண்டு மட்டுமே! என்பதே எனது முடிவு. “ங்” என்னும் ங்கரம்: “ண்” என்னும் ணகரம், “ழ்” என்னும் ழகரம், “ள்” என்னும் ளகரம் “ற்” என்னும் றகரம், “ன்” என்னும் னகரம், இவைகளோ அல்லது இவ்வின எழுத்துக்களோ எந்த வார்த்தையில் முதலெழுத்துக்களாய்ப் பயன்பட்டுள்ளன? உயிர்மெய் சார்பெழுத்துக்களாகிய ங,ண, ழ, ள, ற, ன ஆகிய ஆறு எழுத்துக்களை, தொல்காப்பியர் தவறுதலாக முதலெழுத்துக்கள் என்று கூறியிருக்கலாம், எனக்கருதுகிறேன். சொல்பவர் சொன்னால் கேட்பவருக்கு புத்தி எங்கே போயிற்று? இதுதான் என் சிந்தனை.

உண்மைத் தீர்ப்பு உங்கள் கையில்

தொல்காப்பியரும் நானும், வாதி, பிரதிவாதிகளாக உங்கள் முன்தோன்றி உண்மைத் தீர்ப்பைக் கோருகிறோம். நீங்கள் தீர்ப்பளியுங்கள். உங்கள் தீர்ப்பை உலகு உணரட்டும். உண்மை எதுவென நன்கு புரியட்டும்.

தொல்காப்பியர் கூற்று

நான்: உயிர் எழுத்துக்கள் 10 (பத்து) என்கிறேன். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ இவைகளை உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் (12) முதல் எழுத்துக்கள் என்கிறார்.

என் கூற்று

நான்: உயிர் எழுத்துக்கள் 10 (பத்து) என்கிறேன். அ, ஆ, இ, ஈ, உ, உர், எ, ஏ, ஒ, ஓ, ஆகிய பத்து மட்டுமே இவைகள் இரண்டும் இரு எழுத்துக்களின் கூட்டொலி ஒலிப்பதால் உயிர் எழுத்தாக கருதமுடியாது. “அ” என்னும் அகர ஒலியை மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

தொல்காப்பியர் கூற்று
மெய்யெழுத்துக்களாகிய க்,ங்,ச்,ஞ்,ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ் ள், ற், ன் – ஆகிய பதினெட்டையும் முதலெழுத்தென்கிறார்.

என் கூற்று

நான், ங், ண், ழ், ள், ற், ன், ஆகிய ஆறு எழுத்துக்கள் நீங்கலாக மற்ற பன்னிரண்டு எழுத்துக்களை மட்டுமே முதலெழுத்தென்கிறேன்.

தொல்காப்பியர் கூற்று

முதலெழுத்துக்கள் 30 முப்பது.

அதாவது உயிர் – 12 + மெய் – 18 ஆக 30 (முப்பது)ம் முதலே என்கிறார்.

என் கூற்று
நான், முதலெழுத்துக்கள் முப்பது அல்ல. உயிர் – 10 + மெய் 12 ஆக மொத்தம் 22 (இருபத்தி இரண்டு என அழுத்தமாக ஆணித்தரமாகக் கூறுகிறேன். “ங, ண, ழ, ள, ற, ன” ஆகிய ஆறு உயிர் மெய்யெழுத்துக்களையும் முதலெழுத்துக்கள் எனக் கருதமுடியாது.

இப்பொழுது நன்கு அறிந்திருப்பீர்கள். வாதியின் வாதங்களையும், பிரதி வாதியின் வாதங்களையும் தெரிந்திருப்பீர்கள். இனி தீர்ப்பு வழங்க வேண்டிய கடமை உங்களை கையிலிருக்கிறது. உண்மைத் தீர்பை நாங்கள் இருவர் மட்டும் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்க்கிறான். ஏன்? தமிழ் உலகே எதிர்பார்க்கிறது. உண்மைத் தீர்ப்பை வழங்கி உலகிற்கு உணர்த்துங்கள். வருங்கால நம் தமிழ்த் தலைமுறைக்கு, நீங்கள் பகுத்தாய்ந்த உண்மைத் தீர்ப்பை நீதி அரசர்களாக நின்று வழங்குங்கள்.

தமிழன் தான் உண்மையிலேயே உலகிற்கு நாகரிகங்களை கற்றுத் தந்த தந்தையாவான். தமிழ் நாடு தான் உலக வரலாற்றை உருவாக்கித் தந்த கருவூலம். உலகிலே வரலாறு படைத்துக் கொண்ட மனித வர்க்கத்திற்கே முதல்வன் நம் தமிழன்தான் என்பதை எண்ணி நெஞ்சம் பூரிப்படைகிறது. பெருமைப்படுகிறது.

– கவிஞர் . திடியன் பெ.சிவராமன்