15. ஊகார உயிர்மெய் எழுத்துக்களின் நெடில் குறிகள் மாற்றங்கள்

ஊகார நெடில் உயிர்மெய் எழுத்துக்களைக் கவனியுங்கள். அவைகளின் நெடில் குறிகள் ஒழுங்கற்ற நிலையில் குறிகளின் இன ஒற்றுமையற்று, பல திணைகளை நோகி, பல கோணங்களில், பல நெடில் குறிகளுடன் குழப்பங்களை உருவாக்கும் வகையில் அமைந்திருப்பது நன்கு தெளிவாகும். கீழ்காணும் ஊகார உயிர்மெய் எழுத்துக்களின் நெடில் குறிகளை நோக்குங்கள்.

எண் 1ல் ஏழு எழுத்துக்களின் நெடில் குறிகளாக துணைக்கால் இணைக்கப்பட்டுள்ளது. எண் 2ல் நான்கு எழுத்துக்கள் கீழ் விலங்குடனும், எண் 4ல் ஒரு எழுத்து பக்கவாட்டு நெடில் குறியுடனும் எண் 5ல் ஒரு எழுத்து மேல் விலங்கு மாட்டப்பட்டிருப்பதை நன்குணர்வீர்கள். நடில் குறிகள் பல கோணங்களில் ஒழுங்கற்று இருப்பதைக் காண்பீர்.

மேல் காணும் எழுத்துக்களில் ஊகார நெடில்குறிகள் ஒழுங்கு மற்றும் குறிகளின் இன ஒற்றுமையற்று காட்டு மரங்களை போல் தன்னிச்சையாகச் செயல்பட்டு குழப்பங்களை உருவாக்குது தெரியவரும். அக்குழப்பங்களைப்போக்கி, சீர்செய்து, நெடில் குறிகளை ஒருமுகப்படுத்தி, நெடில் குறிகளின் இன ஒற்றுமையை நிலை நாட்டும் வகையில் இச்சீர்திருத்தத்தை அறிமுகம் செய்கிறேன்.

ஊகார நெடில் உயிர்மெய்யெழுத்துக்களில் நெடில் குறிகளின் மாற்றங்கள்

அட்டவணை: