உயிரெழுத்துக்களில் சீர்திருத்தங்கள்

அ. உயிர் எழுத்துக்கள்


தமிழ் மொழியிலுள்ள உயிர் எழுத்துக்கள் எத்தனை? பன்னிரண்டு என்பதா? இல்லை பத்து என்பதா? இவ்வினாக்களே பெருங்குழப்பத்தை உருவாக்குகிறது. நன்கு சிந்தித்துதான் தீர்வு காணவேண்டும். தீர்வு காணாமல் இருப்பதும் தவறுதான். நம் தமிழ் மொழியின் முதல்படியே உயிர் எழுத்துக்கள் தான். அந்த முதற்படியிலேயே ஒரு குழப்பமா? இந்தச் சிக்கலிலிருந்து விடுபட, பகுத்தறிவாளர்களே! உங்கள் முற்போக்குச் சிந்தனைகளைத் தூண்டிவிடுங்கள், தமிழ் மொழியின் உயிரொலிகளில் ஏற்படக் கூடிய அய்யத்திற்கு தீர்வு காணட்டும். உயிரெழுத்துக்கள் இத்தனை தான் என முடிவெடுக்கட்டும்.

தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தின் வாயிலாகத் தமிழ் மொழியில் பன்னிரண்டு உயிர் எழுத்துக்கள் உள்ளன எனத் தெரிகிறோம்.

ஔகார விறுவாய்ப் பன்னீரெழுத்து உயிரென
மொழிப (தொல்எழுத்து -8)

இத்தொல்காப்பியர் சூத்திரத்திற்குப் பொருள் கூறிய உரையாசிரியர் இளம்பூரணர் ஔகார இறுதி ஒலியுடைய 12 (பன்னிரண்டு) எழுத்துக்களையும் உயிரெழுத்துக்கள் தான் என்ற முடிவிற்கே வந்துவிட்டார். அங்கு தான் பெரும் குழப்பமும், சிக்கலும் ஏற்படுகிறது.

கி.பி.3-ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கிய தனித்தன்மை பெற்று, தனிதமிழ் மொழியாக வளரத் தொடங்கியது . கி.பி. 3-முதல் கி.பி.6 ஆம் நூற்றாண்டுகள் வரையுள்ள அரிச்சலூர் மற்றும் பூலாங்குறிச்சிக் “கல்வெட்டுக்கள்” வாயிலாகவும், வட ஆற்காடு, தென்னாற்காடு, கோவை, தர்ம்புரி, போன்ற இடங்களில் கிட்டியுள்ள “நடுகற்கள்” வாயிலாகவும் அறிய முடிகிறது. ஒவ்வொரு கல்வெட்டுக்களும் நடுகற்களும் தமிழ் வட்டெழுத்துக்களால் ஆனவைகள், அவைகள் தமிழ் எழுத்துக்களைப் பற்றிய புகைப்படமே காட்டுகிறது. இதன் வாயிலாகத் தமிழ்மொழியில் உயிர் எழுத்துக்கள் பத்து என உணர முடிகிறது. “ஐ” மற்றும் “ஔ” இவ்விரு எழுத்துக்களும் கல்வெட்டில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பத்தை உருவாக்கும் உயிர் நெடில் வரி வடிவங்கள்

1. ஆ 2. ஈ 3. ஊ 4. ஏ 5. ஐ 6. ஔ என்னும் ஆறு எழுத்துக்கள்

மேற்காணும் ஆறு உயிர் எழுத்துக்கள் பெருங்குழப்பத்தை உருவாக்கும் வகையில் அதன் வரிவடிவங்கள் அமைந்துள்ளன. உயிர் எழுத்துக்களில் குறில் ஒலியெழுத்துகள் அமைந்துள்ளதைப் போல் ஒரு சீரான ஓர் ஒழுக்கத்துடன் உயிர் நெடில்களின் வரிவடிவங்கள் அமையப்படவில்லை. இவற்றின் வரிவடிவங்களை ஒழுங்கு படுத்திச் சீர்காண அனைவரும் முயல்வோம்.

1. “ஆ” என்னும் உயிர் நெடில்

“ஆ” என்கின்ற எழுத்து நெடிலொலியை எழுப்புகிறது. சரியே! அகரக் குறில் ஒலியெழுப்பும் வரிவடிவமான “அ” என்ற எழுத்தையொத்து, கீழ்நெடில் குறி இணைந்து ஆகார நெடில் ஒலியாக மாறியொலிக்கிறது. அதுவும் சரியே! ஆனால் ஆகார நெடில் ஒலியைக் குறிக்கும். கீழ் நெடில் குறி (கீழ்விலங்கு) இணைக்கப்பட்டு எழுத்துரு வொழுக்கத்தைக் குறைத்துக் காட்டுகிறது. ஆக மொத்தத்தில் ஆகாரமாகிய நொடிலொலியைக் குறிக்க மட்டுமே அக்கீழ்விலங்கு மாட்டப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அக்கீழ் விலங்கானது ஆகார நெடிலினத்தின் உயிர்மெ எழுத்தொழுங்கை ஒத்துப் போகாமல் முரண்பாடான நிலையை உருவாக்குகிறது. ஆகார நெடிலொலியெழுப்பும் உயிர்மெய்களைச் சற்று உற்றுக் கவனியுங்கள். (கா, ஙா, சா, ஞா, டா, ணா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா, றா, னா) இவைகளெல்லாம் ஆகார நெடில்களாக துணைக்கால் “ர்” இணைந்து ஒலிக்கின்றன. இவற்றைப் போலவே, உயிரெழுத்திலும் ஆகா, நெடில் குறியாக இருக்கும் கீழ் விலங்கை நீக்கிவிட்டு துணைக்கால் “ர்” சேர்ப்பதே எழுத்தொழுங்கையும், எழுத்தின் நெடில் குறிகளின் இன ஒற்றுமையையும் நிலைநாட்டும். ஆகவே ஆகாரத்தின் நெடில் குறியாகிய கீழ் விலங்கை நீக்கிவிட்டு துணைக்கால் இணைத்து சீர்திருத்தம் காண்கிறேன்.

“ஆ” என்னும் உயிர் நெடில் சீர்திருத்தம்

“அ” என்ற அகரக்குறிலொலியின் நெடில் ஒலியே “ஆ” என்ற ஆகா நெடிலொலி. ஆகார நெடிலொலியைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட கீழ்விலங்கை நீக்கிவிட்டு மாற்று வழியைக் கையாண்டால் என்ன? அதாவது உயிர்மெய் எழுத்துக்களில் நெடிலைக் குறிக்க துணைக் “கால்” சேர்ப்பதைப் போல், முழுத்துணைக்கால் கூடச் சேர்க்க வேண்டாம். அரைக்கால் இணைந்து அகார நெடிலாக மாற்றலாமே! இம்மாற்றம் எழுத்துக்களின் வரிவடிவங்கள் மட்டும் தான். ஒலிவடிவ மாற்றங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை பெரியாரின் சீர்திருத்தம்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஆகார உயிர்மெய் எழுத்துக்களில் மூன்று நெடில் குறிகளை மாற்றியமைத்தார் அந்த மூன்று எழுத்துக்களில் பின்னப்பட்டிருந்த சிக்கல்களைக் கழற்றி, நெடில் எழுத்துக்களின் ஒற்றுமையை நிலை நாட்டினர். எழுத்து வரிவடிவ ஒழுங்கினைச் சுட்டிக்காட்டினார். கீழ்க்காணும் மூன்று எழுத்துக்களின் நெடில் குறிகள் (கீழ்விலங்கு) நீக்கப்படுகிறது.

“h” துணைக்கால் பொருத்தப்பட்டுள்ளது.

1. ண +2……….
2.
3.

மேற்காணும் மூன்று எழுத்துக்களின் கீழ்விலங்குகள் கழற்றப்பட்டுள்ளன. இதே முறையை, நன்நெறியை, ஏன் உயிர் எழுத்து நெடிலிலும் காட்டக்கூடாது? (அ+ர்=அர்) இம்முறையே மிகச்சிறந்த முறையாக்க் கருதுகிறேன்.

2. “ஈ” என்னும் உயிர் நெடில்

“ஈ” இது “இ” என்னும் இகர உயிர்க்குறிலின் நெடில் ஒலியாக “ஈ” என ஒலிக்கிறது. உயிர் எழுத்துக்களில் குறிலொலிக்கும் நெடிலொலிக்கும் ஒற்றுமை இருப்பதைப்போல் வரி வடிவ ஒற்றுமையும் இருந்தாக வேண்டும். இகரத்திற்கு நெடிலாக ஒலித்தால் இகரத்தின் உருச்சாயலை சிறிதாவது பெற்றிருக்க வேண்டும். அப்படியும் அமையப்படவில்லை.

உ -ம் “இ” – “ஈ”

இப்போது நோங்குங்கள். உயிர் இகரக்குறிலுக்கும் ஈகாரநெடிலுக்கும் ஏதாவது உருவ ஒற்றுமை உண்டா? எந்தத் தொடர்புமற்ற மாறுபட்ட வரி வடிவங்களைப் பெற்றுள்ளது தான் குழப்பத்தை உருவாக்குகிறது.

இகரமாக ஒலிக்கும் “இ” என்னும் வரிவடிவின் சாயல், நெடில் ஒலியாக ஒலிக்கும் வரிவடிவிற்கு கண்டிப்பாக ஒரு சிறிதேனும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் “இ-ஈ” என்கின்ற இரு எழுத்துக்களின் வரிவடிவங்களைச் சற்று உற்று நோக்குங்கள். ஏதாவது ஒரு சிறு ஒற்றுமையாவது உண்டா? வரிவடிவங்கள் நேர்மாறாக உள்ளதே! யானையும் பூனையும் போல் நேர்மாறான வேற்று வரி வடிவங்களைப் பெற்றுள்ளது தெளிவாகும். இக்குழப்பத்தால் தமிழ் மொழி கற்போர்களுக்கு பல அய்யங்களும் சந்தேகங்களும் வருகின்றன.

“ஈ” என்னும் உயிர்நெடில் சீர்திருத்தம்

உயிர் எழுத்துக்களில் மூன்றாம் எழுத்து இ, “இ” என்ற வரிவடிவை மையமாகக் கொண்டு 18 பதினெட்டு உயிர் மெய்களும், தம் உருக்களில் “இ”யின் குறில்குறியாக மேல்ச் சாயலைப் பெற்றுத்தான் பிறந்துள்ளன. உயிர்மெய் எழுத்துக்களின் மேல்ச்சாயலை நன்கு உற்று நோக்கிப்பின் “இ”யின் மேல்ச்சாயலையும் உற்று நோக்குங்கள். எழுத்துக்களின் வரிவடிவ ஒழுங்கொற்றுமை நன்கு புலப்படும்.

“ஈ” இந்த உரு என்ன எழுத்து?

இது ஒரு சித்திர வடிவம். இது இகரத்தின் வழிவந்த ஈகாரம் அல்ல. உயிர்மெய் எழுத்துக்களில் நெடிலைக் குறிக்கும். ஒரு துணைக்கால் “ர்”. இத்துணைக்காலுக்கும் உள்ளும் வெளியும் இரு முற்றுப்புள்ளிகள். அதாவது நிறுத்தல் குறிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் “ஈ” இந்த வரிவடிவம் ஒரு ஓவியம். இகர நெடிலாகக் கருத முடியாது.

1. “ர்” இவ்வடிவம் ஒரு நெடில்குறி துணைக்கால்
2. “.” “.” இரண்டும் நிறுத்தல் குறிகள்.

இம் மூன்றுமே குறிகள் தான். எழுத்தோ அல்லது வரி வடிவமோ! அல்ல. இது ஒரு குறிகளின் கூட்டம்தான். இகரத்தின் நெடில் வரிவடிவம் அல்ல என்பதே என் வாதம்.

ஒரு நெடில் குறியாகிய “ர்” துணைக்காலையும், இரு முற்றுப்புள்ளிகளையும் வைத்து ஈகாரம் என்பது எந்த விதத்தில் சரியாகும்? ஒரு சிறிதும் இகரத்துடன் ஒவ்வாத, பொருந்தாத குறில்களின் கூட்டத்தை ஈகார வரி வடிவம் என்று எப்படி ஏற்பது? ஈகார எழுத்தொழுங்கும் ஈகார எழுத்தின் ஒற்றுமையுமற்றுக் காணப்படுகிறதே! ஆகவே ஈகார வடிவடிவையே நீக்கிவிட்டு சீர்திருத்தம் காண்கிறேன். மேலும் இகரக்குறில், ஈகார நெடிலின் உயிர்மெய்யெழுத்துக்களைக் கவனியுங்கள்.

உயிர், மெய் இகரக்குறிகள்

உயிர்மெய் ஈகார நெடில்கள்

1. க் +இ = கி

1. க்+ஈ=கீ
2. ங் +இ=ஙி 2.ங்+ஈ=ஙீ
3. ச் + இ =சி 3. ச்+ஈ=சீ
4. ஞ்+இ=ஞி 4. ஞ்+ஈ=ஞீ
5. ட் +இ=டி 5. ட்+ஈ=டீ
6. ண்+இ=ணி 6. ண்+ஈ =ணீ
7. த்+இ= தி 7.த்+ஈ=தீ
8. ந்+இ=நி 8. ந்+ஈ=நீ
9. ப்+இ=பி 9. ப் + ஈ=பீ
10. ம்+இ=மி 10. ம்+ஈ = மீ
11.ய்+இ=யி 11. ய்+ஈ=யீ
12. ர்+இ=ரி 12. ர்+ஈ=ரீ
13. ல்+இ=லி 13. ல்+ஈ=லீ
14. வ்+இ=வி 14.வ்+ஈ=வீ
15. ழ் +இ =ழி 15.ழ்+ஈ=ழீ
16.ள்+இ=ளி 16.ள்+ஈ=ளீ
17. ற்+இ=றி 17. ற்+ஈ=றீ
18. ன்+இ=னி 18.ன்+ஈ=னீ

இவ்வெழுத்துக்கள் எல்லாமே இகர, ஈகார ஒலியெழுப்பும் உயிர்மெய்யெழுத்துக்களே! இவற்றைப் போலவே “ஈ” என்ற வரிவடிவை மாற்றி இகரத்துடன் மேல் சுழி “— ” மாட்டினால் “இ’ என்று சுலபமாகத் தெரியலாம். மேலும் எழுத்தொழுங்கையு காத்து நெடில் குறிகளின் இன ஒற்றுமையையும் காக்க முடியும். இ-இ என்றிருந்தால் கற்போருக்கு எந்தவித குழப்பமின்றி சுலப முறையிலும், எளிய நடையிலும், பயில ஏதுவாகும்.

……..
…….

3. “ஊ” என்னும் ஊகார நெடில்

எவ்வுடலாயினு மோருயிரே!
எவ்வுயிராயினு மோருடலே!

இதுவே என் கருத்து. உலகநீதியும் கூடத்தான். இதைவிட்டுவிட்டு இரு மாறுபட்ட எழுத்தினங்களை ஒருங்கிணைத்து ஊகாரமாக்குவது முறையற்ற செயலே! எழுத்து என்பது முறையா? இரு எழுத்துக்களை ஒரு எழுத்து என்று கூறலாமா?

ஒரு உயிரானது ஏதாவது ஒரு உடலில் (மெய்யில்) புதைந்திருக்கவேண்டும். அதுவே உலக நியதி.. அவ்வாறே நம் தமிழ் மொழியிலுள்ள உயிர் எழுத்துக்களும் ஒவ்வொரு வரி வடிவங்களில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் நம் தமிழ் மொழியில், “ஊ” “ஔ” என்ற இரண்டெழுத்துக்களை பிற உயிர் நெடில்களோடு ஒப்பிடும்போது ஏகப்பட்ட மாறுபாடுகள், குழப்பங்கள், சிக்கல்கள் போன்றவைகளை உருவாகின்றன.

“உ”, “ஊ” உகரக் குறியிலும் ஊகார நெடிலும்

“உ” என்ற உயிரெழுத்து உகரக் குறிலொலியை அழகாக எடுத்துரைக்கிறது. அக்குறிலொலியைச் சார்ந்த ஒலியாகத் தான் அதன் நெடிலொலி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒலி மட்டுமின்றி அதனை உருவ அமைப்பும் (வரிவடிவம்) உகரத்தின் சாயலையுடைய ஊகாரமாக இருக்க வேண்டும். ஆனால் “ஊ”வை எடுத்துக் கொண்டால் நேர்மாறான வரிவடிவத்தைப் பெற்றுள்ளது. ஒரு உயிர் ஈரூடல் புகலாமா? உயிர்மெய் எழுத்தான “ள” என்ற ளகரத்தை தன்னுடன் இணைத்து ஒரு உயிரொலியாக ஒலிக்கலாமா? இல்லை ஒலிக்கத்தான் முடியுமா? இது வரம்பிற்கு மீறிய செயலாகத் தோன்றுகிறது.

“உ” என்ற உயிர்க்குறிலுடன் நெடில்குறி இணைத்து உயிர்நெடிலாக மாற்றி, நெடிலொலி எழுப்புவது தானே ஒழுங்குமுறை. அங்கு “ள” என்னும் ளகரத்திற்கு என்ன வேலையுள்ளது? எதற்காக மாற்று இன ளகரம், உகரத்தை ஆட்கொள்கிறது? உ+ள+உள என்பது இரு வரிவடிவங்கள் கொண்ட ஒரு வார்த்தையே!

“ஊ” வில் ஏற்படும் குழப்பங்களும் அய்யங்களும்

1. மற்ற உயிர் நெடில்களைப் போல ஓரெழுத்து வரிவடிவமாய் அமையப்படவில்லை. இருவடிவங்கள் உள்ளன.

2. ஈரெழுத்துக்கள், ஒரு நெடிலாய் ஒலிக்கிறது. இரு எழுத்துக்கள் சேர்ந்தாலே வார்த்தையாகிவிடும்.

3. உயிர்க்குறிலாகிய “உ” வின் மீது “ள” என்னும் ளகர உயிர்மெய் மேலேறி அமர்ந்தாட்கொள்கிறது. (ள – வேற்றின எழுத்து) உயிர்மெய்க் கலவை உள்ளது.

4. உயிர் மெய்யாகிய ளகரத்திற்கு, உயிரெழுத்து வரிசையில் என்ன வேலை உள்ளது? ளகர ஒலி என்னவாயிற்று?

5. “உ” என்னும் உயிர்க்குறிலோடு ஊகார நெடில்க்குறி இணைக்கப்படவில்லையே!, ஏன் “ள” நெடில் குறியா?

6. ஓருயிராய் ஒலிக்கும் உயிர்நெடில் ஈருடல் மேவுகிறது. இது எவ்வாறு ஏற்புடையதாகும்.

7. இரு மாறுபட்ட இனவெழுத்துக்கள் (உ+ள) இணைந்து, ஒரு உயிர் நெடில் ஒலியை எழுப்புகின்றது என்றால், ஏற்கக்கூடியதா? உறுதியாக இவ்விரு எழுத்துக்களும் ஊகார நெடிலொலியைச் சீராக எழுப்பவே முடியாது.

ஊகார உயிர் நெடில் சீர்திருத்தம்

“ஊ” என்ற வரிவடிவம் ஊகாரம் என்ற பேரேற்று உயிர்நெடிலாக ஒலிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று அல்ல. ஊகார நெடில் குறியேதும் இணைக்கப்படாமல் “ள” என்னும் மாற்று இன எழுத்தாகிய ளகரத்தை பொருத்தியிருப்பது ஒரு சிறிதும் பொருந்தாத ஒன்றே! “உ” என்னும் உகரக் குறிலோடு “ள” என்னும் ளகரம் வரம்பு மீறி இணைந்து செயல்படுவது, பெரும் குழப்பத்தை உருவாக்குவதோடு, உயிரெழுத்தொழுங்கையும் சீர்கெடுத்து, தமிழ்மொழியின் தரத்தையும் கெடுக்கிறது என்றே ஓங்கிக் குரல் கொடுக்கிறேன். “ள” என்னும் ளகரம் மாற்றினமாகிய உயிர் மெய்க் கலவையை நீக்க வேண்டும்.

ஆகவே, “ஊ” என்னும் வரிவடிவின் மேலுள்ள “ள” என்னும் ளகரத்தை அவ்விடத்திலிருந்து, அப்புறப்படுத்துகிறேன். அப்புறப்படுத்தி விட்டால் “உ” என்னும் உகரம் மட்டும் மிஞ்சும். அதாவது “உ” என்னும் உகரக் குறிலாக மாறிவிடும். சரி, இனி நமக்கு உகரக்குறில் கிட்டிவிட்டது. இனி நமக்கு வேண்டியது ஊகார நெடில் குறி மட்டுமே! குறில் நம்மிடம் உள்ளது. நமக்குத் தேவை நெடில் குறி மட்டுமே! “உ” என்னும் உகரத்துடன் “ர்” இந்த நெடில் குறியை இணைத்தால் உ+ர் = என்னும் ஊகார நெடில் கிட்டும், எழுத்தொழுங்கை எட்டும் என நம்புகிறேன்.

உ + ள = ஊ – நீக்கம்
உ + ர் = உர் – சீர்திருத்தம்
உர் – உர்கார நெடில்

4. “ஏ” என்னும் உயிர் நெடில்

எகரக் குறிலாகிய “எ” யின் உருச்சாயலை ஒத்தே “ஏ” என்னும் ஏகார நெடில்வரி அமைந்துள்ளது. இருப்பினும் கீழ்த்தாடை (கீழ்விலங்கு) நெடில்குறியாக இணைகப்பட்டுள்ளது. “எ”யிற்கு எகரக் குறில் குறியாக ஒற்றைக் கொம்பு இணைந்து உள்ளது. எகரத்துடன் புணரும் உயிர் மெய்க்குறில்களுக்கும் ஒற்றைக்கொம்புள்ளது. இதைப்போலவே, நெடிலுடன் புணரும் உயிர்மெய் ஏகார நெடிலுக்கு இரட்டைக் கொம்பிணைத்துக் காட்சியளிக்கின்றன.

(உ.ம்) எ குறில்

1.கெ 2.ஙெ 3.செ 4. ஞெ 5.டெ 6. ணெ 7. தெ 8. நெ 9. பெ 10. மெ 11. யெ 12. ரெ 13.லெ 14.வெ 15. ழெ 16. ளெ 17. றெ 18. னெ
எ நெடில்
1.கே 2. ஙே 3. சே 4. ஞே 5. டே 6. ணே 7. தே 8. நே 9. பே 10. மே 11. யே 12. ரே 13. லே 14. வே 15. ழே 16. ளே 17. றே 18. னே

இதைப் போலவே, ஏகார நெடிலுக்கும், எழுத்தொழுங்குடன் எழுத்தொற்றுமையை நிலை நாட்டி ஒலிக்கக் கூடிய ஒரு நெடில் குறி அமைக்கப்படுவதே சரியான முறையாகும். ஆனால் ஏகார நெடிழொலியெழுப்பும் “ஏ” வானது, ஒழுங்காகத்தான் நெடிலொலி எழுப்புகிறது. ஆனால் வரிவடிவம் முரண்பாடுடன் காணப்படுகிறது. எகரக் குறிலொத்த வரிவடிவச் சாயலைப் பெற்றிருப்பினும் எழுத்தொழுங்கு மற்றும் எழுத்தொற்றுமையற்றவோர் நெடில் குறி அமைந்துள்ளது. எகரக் குறில் குறியும் ஒத்துப்போவதைப் போல் ஏகாரம் அமையவில்லை என்பதே என்வாதம். ஆகவே “ஏ” என்னும் ஏகார நெடில் வரி வடிவில் இணைக்கப்பட்டுள்ள நெடில் குறி “/” கீழ்விலங்கை நீக்கிவிட்டு மாற்றுவழியைக் கையாளுகிறேன்.

“/” இந்த நெடில் குறிக்குப் பதிலாக ” ” இரட்டைக் கொம்பைப் பொருத்தினால் எழுத்தொழுங்கும், எழுத்தின் ஒற்றுமையும் அழகாக்க்கிட்டும். “ஏ” என்னும் ஏகார வரிவடிவில் பொருத்தப்பட்டுள்ள நெடில் குறி “/” யை அகற்றிவிட்டால் நமக்கு “எ” என்னும் எகரம் மட்டும் மிஞ்சும். அந்த எகரத்துடன் நெட்டொலி எழுப்ப, நெடில் குறியாக “” இரட்டைக் கொம்பினைக் கூறுகிறேன். அதாவது தயவு செய்து சற்று உற்று நோக்குங்கள். (கே, ஙே, சே, ஞே, டே, ணே, தே, நே, பே, மே, யே, ரே, லே, வே, ழே, ளே, றே, னே) இவ்வுயிர்மெய்கள் அனைத்துமே ஏகார நெடிலாக ஒலிப்பவைகள். இவைகள் அனைத்துமே நெடில் குறியாக இரட்டைக் கொம்புடன் வரிவடிவம் பெற்று நிலைக்கிறது. இப்பொழுது ஒத்து பாருங்கள். உயிர் நெடிலாகிய “எ” வின் நெடில் குறியும், ஏகார நெடிலொலியெழுப்பும் 18 உயிர்மெய்களின் நெடில் குறியும் ஒத்ததாயிருக்கும். அத்தோடின்றி எழுத்தொழங்கையும், குறியின் எழுத்தொற்றுமையும் நாட்டலாம்.