12. “ஐ” அய்காரம் “ஔ” அவ்காரம் மற்றும் இத்துடன் புணரும் உயிர்மெய் எழுத்துக்கள் நீக்கம்

“ஐ” “ஔ” என்னும் உயிரெழுத்துக்கள்

உயிரெழுத்துக்களில் “ஐ” “ஔ” ஆகிய இரு எழுத்துக்களுமே தேவையற்றவைகள் எனத் தீர்மானிக்கிறேன். இவைகள் கி.பி. 8ஆம் நாற்றாண்டு வரை தமிழ் எழுத்துத் தொகுப்பில் இடம் பெறாதவைகள். (சேர, சோழ பாண்டியனின் வட்டெழுத்தட்டவணையை நோக்குங்கள்). இவை இரண்டுமே தொன்மை வாய்ந்த உண்மைத் தமிழெழுத்தல்ல எனத் தெரிய வரும். இவைகள் பிறமொழிக் கலவைகளே! சோழர்கள் காலத்தில் புகுத்தப்பட்டவைகள்.

குறில் என்ற ஒன்று இருந்தால் தானே நெடில் என்ற ஒன்று உருவாக முடியும். குறிலொலி இலாமல், நான் நெடிலாக ஒலிக்கிறேன் என்றால் எப்படி நம்புவது? நெடிலாக ஒலிக்கும் அவ்விரு எழுத்துக்களின் குறிலொலிகள் எது? வரிவடிவங்கள் எவை? குறில் இல்லா நெடிலொலி ஒலிப்பது சரியா? மேலும் நெடிலெனப் பேரேற்று “அய்” என குறிலொலி தானே ஒலிக்கிறது. இவ்வொலியை நெடிலொலி என்று எவ்வாறு ஏற்பது? நெடில் தான் என்று உங்களால் உறுதியாக கூற இயலுமா? எவராலும் ஒத்துக்கொள்ள முடியாது.

“ஐ” என்பதை நீங்கள் உச்சரித்துப் பாருங்கள். “அ” என்னும் அகரக் குறிலொலியில் பிறக்கிறது. “ய்” என்னும் மெய்யொலியால் முடிகிறது. “ஔ” என்பதையும் உச்சரித்துப் பாருங்கள். ஒலிக்கு உகந்த உருவம் உள்ளதா?. “அ” என்னும் அகரக் குறிலொலியில் தான் ஆரம்பமாகிறது. “வ்” என்னும் மெய்யொலியால் முடிகிறது. இனி “ஐ” மற்றும் “ஔ” ஆகிய இவ்விரு எழுத்துக்களையும் உற்று நோக்குங்கள். “அ” என்னும் உயர்க்குறிலின் சாயலையோ அல்லது “ய்” “வ்” என்னும் மெய்களின் உருச்சாயலையோ பெற்றிருக்கிறதா? அதுவும் இல்லை.

குழப்பங்கள்:

1, “ஐ” மற்றும் “ஔ” இரண்டுமே தமிழ் எழுத்தல, பிறமொழிக் கலவைகளே!
2. குறிலில்லா நெடில்களாக ஒலிக்கின்றன. குறில் இலிலாமல் நெடில் என்று எவ்வாறு உறுதிப்படுத்துவது? குறில்கள் என்னவாயிற்று? குறிலில்லா நெடில் ஒலிக்க முடியுமா?
3. கி.பி. 8ம் நூற்றாண்டுகள் வரை மூவேந்தர்களின் வட்டெழுத்துக்களில் இடம் பெறவில்லை.
4. உயிரெழுத்துக்களில் மூன்று அகர ஒலிகளா? என்ற குழப்பத்தையும் அய்யத்தையும் உருவாக்குகின்றன.
(அய், அவ், அக்) “அ” என்னும் ஒரு ஒலியை மீண்டும் மீண்டும் மாற்று வரிவடிவங்கள் ஒலிக்கலாமா?
5. இவை இரண்டும சொந்த ஒலி இல்லாதவைகள். மாற்று வரிவடிவின் ஒலியை திருடி ஒலிக்கின்றன.
6. அகரக்குறிலாகிய “அ”வின் ஒலியையும், மெய்யொலிகளாகிய “ய்” “வ்” வின் ஒலிகளையும் திருடுகிறது. இவைகள் இரண்டும் ஒலித்திருடர்கள். இதற்கென்று சொந்த ஒலிகள் இல்லை. உயிரற்ற சடலங்கள் தான்.

எப்படி ஏற்பது?

ஐகாரம், ஔகாரம் இரண்டுமே குறிலொலியைத் தானே ஒலிக்கின்றன. அய்காரம், அவ்காரம் என்னும் இரண்டையும் எவ்வாறு நெடிலாகக் கருதுவது? அய், அவ் என்று, உயிரெழுத்துடன் மெய் சேர்ந்து கூட்டுக்குறிலொலியைத் தான் எழுப்புகின்றன. இவைகளை நெடில்களாக எப்படி ஏற்பது? இவைகள் குழப்பத்தை உருவாக்கும் குறில்களே! நெடில்கள் அல்ல. காரங்கள் அல்ல! கரங்களே! உயிரொலியும் அல்ல.

“ஐ” “ஔ” “ஃ” ஒலித் திருடர்கள்

இம்மூன்று எழுத்துக்களும் ஒலித்திருடர்கள். பிற எழுத்துக்களின் ஒலியைத் திருடுவது தான் இவைகளின் வேலை. தனது சொந்த ஒலியை ஒலிக்கும் வல்லமையற்ற பேடிகள். “அ” என்னும் அகரக்குறில் ஒலியையும் திருடுகிறது. திருட்டு ஒலியைத்தான் ஒலிக்கிறது. திருட்டு ஒலியை ஒலிப்பதினால் பல குழப்பங்களும் அய்யப்பாடுகளும் உருவாகின்றன. இவைகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன. இம்மூன்றும் தேவையற்ற குப்பைகளே! இவைகளை அப்புறப்படுத்தியே ஆகவேண்டும். இதன் இழப்பை நம்மிடம் உள்ள பிற எழுத்துக்களால் ஈடு செய்ய முடியும்.

தமிழ் மொழியில் அவல நிலை

“ஐ” “ஔ” இரண்டும் அய்காரநெடில், அவ்காரநெடில் எனப்பேரேற்று இயம்புகிறது. குறில் இல்லா நெடில் இருக்கமுடியுமா? குறில் இல்லை என்பதும் ஒரு அவலநிலைதானே! மேலும் நெடில் என பேரேற்று குறிலாக ஒலிப்பதும் அவல நிலை அல்லவா? அ+ய் = அய்; அ+வ்=அவ்; இவ்விரு ஒலிகளையும் நீங்கள் உங்கள் வாயால் ஒலித்துப் பாருங்கள். இவ்வொலிகள் நெடிலொலிக்குரிய இரண்டு மாத்திரை அளவில் ஒலிக்கின்றதா? இல்லையே! பின் எவ்வாறு நெடில் என்கிறார் தொல்காப்பியர்? நீங்களும் எவ்வாறு நெடில் என ஏற்றுக் கொள்கிறீர்கள்? இது அவலநிலையல்லவா?

அ+இ = ஐ(காரம்) நெடில் என்கிறார். ஆனால்
அ+இ = அயி; இது குறிலொலி தானே!
அ+உ= அவு; இது குறிலொலி தானே!

இந்த அவல நிலை நம் தமிழ்மொழியில் இருக்கலாமா?

சந்தியக்கரமும் அல்ல

ஐ, ஔ இரண்டையும் சந்தியக்கரம் என்று பலர் எண்ணுகின்றனர். அது தவறான எண்ணம். சந்தியக்கரம் என்பது இரு உயிரொலிகள் சேர்ந்து ஒலித்து, வேறு மாற்று ஒலியை உருவாக்க வேண்டும். அப்படியும் அமையவில்லையே இந்த “ஐ”யும் “ஔ”வும். இவ்விரு எழுத்துக்களையும் சந்தியக்கரம் அல்ல என்று டாக்டர் மு.வ. ஆணித்தரமாகக் கூறுகின்றனர். ஓருயிரில் ஈரினச்செயற்கை, அதாவது இரு வரிவடிவுகள் சேர்ந்தொலிப்பது முறையா? “ஐ” “ஔ” இவ்விரு எழுத்துக்களையும் இதனுடன் புணரும் அய்கார, அவ்கார உயிர்மெய்கள் ஆக மொத்தம் 38 (முத்தத்தெட்டு) எழுத்துக்களையும் நீக்குகிறேன்.

“ஐ” என்னும் அய்காரம் நீக்கம்

1. “ஐ” என்னும் அய்காரம், இதனுடன் புணரும் 18 அய்கார உயிர்மெய் கை, ஙை, சை, ஞை, டை, ணை, தை, நை, பை, மை, யை, ரை, லை, வை, ழை, ளை, றை, னை போன்றவைகளை நீக்குகிறேன்.

“ஐ” என்ற உயிர் நெடிலையும் இதனுடன் புணரும் பதினெட்டு உயிர் மெய்களையும் (1 + 18 = 19)

எழுத்துக்களையும் அடியோடு நீக்கம் செய்துள்ளேன்.

“ஔ” என்னும் அவ்காரம் நீக்கம்

2. “ஔ” என்னும் அவ்காரம், இதனுடன் புணரும் 18 அவ்கார உயிர்மெய்கள், கௌ,ஙௌ,ஞௌ,டௌ,ணௌ, தௌ,நௌ,பௌ,மௌ,(1+18=19) அவ்காரம் மொத்த எழுத்துக்களையும் நீக்கம் செய்கிறேன்.

ஈடு கட்டும் முறை

அய்காரமும் இதன் புணர்ச்சிகளும் நீக்கப்ட்டால் தமிழ் மொழியே அழிந்துவிடும் என்று பொருள் அல்ல. ஏனென்றால், ஐ எனபது தமிழ் எழுத்து அல்லவே! தேவையற்ற குப்பைகளைத்தான் வெளியேற்றுகிறேன். இதனால் யாதொரு இழப்பும் ஏற்பட்டுவிடாது. நம்மிடமுள்ள பிற எழுத்துக்களால் ஈடு செய்யமுடியும்.

“ஐ” அய்காரம் நீக்கம் இழப்பை ஈடுசெய்யும் முறைகள்

மாற்றுமுறை – அ+ய் =அய்
(உ-ம்) 1. ஐவர் -அய்வர்
2. ஐந்து – அய்ந்து
3. ஐய்யம் – அய்யம்

என்று எளிதாக எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

12. “ஐ” “ஔ” அய்கார, அவ்கார உயிர் நெடிலுடன் புணரும் உயிர்மெய் எழுத்துக்கள் நீக்கம்

இழப்பை ஈடு செய்யும் முறைகள்

1. “ஐ” அய்யுடன் புணரும் அய்கார உயிர்மெய்கள் நீக்கம்

ஐ – நீக்கம் – அ+ய் = அய் என கையாளலாம்

1.(கை) க+ய் = கய்
கைதிகள் = கய்திகள்
கைமாறு = கய்மாறு
மங்கை = மங்கய்
கைப்பை = கய்ப்பய்

2. (ஙை) ங+ய் = ஙய்
மங்கை = மங்கய்
செங்கை = செங்கய்
நங்கை = நங்கய்

3. (சை) ச+ய் = சய்
பச்சை = பச்சய்
நஞ்சை = நஞ்சய்
புஞ்சை = புன்சய்

4.(ஞை) ஞ+ய் = ஞய்
சமிக்ஞை = சமிக்ஞய்

5. (டை) ட+ய் = டய்
முட்டை = முட்டய்
குடை = குடய்
மடை = மடய்

6. (ணை) ண+ய் = ணய்
அரசாணை = அரசாணய்
ஆணை = அர்ணய்
பூணை = பூணய்
7. (தை) த+ய் = தய்
தைமாதம் = தய்மாதம்
மந்தை = மந்தய்
சந்தை = சந்தய்

8.(நை) ந+ய் = நய்
நைல்நதி = நய்ல் நதி
நையாண்டி = நய்யாண்டி
நைலான் = நய்லான்

9. (பை) ப+ய் = பய்
பையன் = பய்யன்
கைப்பை = கய்ப்பை
உடம்பை = உடம்பய்

10. (மை) ம+ய் = ம+ய்
மைப்பேனா = மைப்பேனா
ஆமை = அர்மய்
வல்லமை = வல்லமய்

11. (யை) ய+ய் = யய்
கையை = கய்யய்
பொய்யை = பொய்யய்
மெய்யை = மெய்யய்
12. (ரை) ர+ய் = ரய்
அவரை = அவரய்
அரை = அரய்
மரை = மரய்

13. (லை) ல+ய் = லய்
லைலா = லய்லா
அலை = அலய்
சிலை = சிலய்

14. (வை) வ+ய் = வய்
வைகை = வய்கய்
அவை = அவய்
வைரம் = வய்ரம்

15. (ழை) ழ+ய் = ழய்
கோழை = கோழய்
வாழை = வாழய்
பேழை = பேழய்

16. (ளை) ள+ய் = ளய்
அவளை = அவளய்
களை = களய்
அவர்களை = அவர்களய்

17. (றை) ற +ய் = றய்
அறை = அறய்
மறை = மறய்
குறை = குறய்

18. (னை) ன + ய் = னய்
அவனை = அவனய்
மண்னை = மண்னய்
தென்னை = தென்னய்

மேற்கண்ட முறைப்படி கையாளலாம்.