காணிக்கை – தாய் தந்தைக்கு

காணிக்கை – தாய் தந்தைக்கு

கடல்வற்றிப் போனாலும் போகும்… அம்மா!
என் கண்ணில் நீரென்றும் வற்றியா போகும்?
என் நெஞ்சு வானத்தினூடே… நொடி
தவறாது மதிபோலே திரிவாயே… அப்பா!
அன்பிற்கு இருப்பிடமாக… நல்லுயர்
பண்பிற்கு பிறப்பிடம் போலே…! நின்
சேயாக நானிங்கு தாயே உனையெண்ணி
தேம்பியழுகிறேன் தூங்காத கண்ணினாய்
நீயென்னை மறந்துமே! மறைந்தாய்… நானோ!
உனையென்று நினைவின்றி மறப்பது அம்மா!
தந்தை அண்ணாவின் சீரிய நெறியில்… நீயோ!
என்னையும் உன்னோடு அன்போடு அழைப்பாய்!
இறப்பினில் எனை ஏனோ தனிமையில் விட்டாய்?
இதயம் துடிக்கின்ற ஒவ்வொரு துடிப்பிலும்… அப்பா!
நீ துடிக்கின்றாய் ஓய்வின்றி உடலெங்கும் என்னில்
என் அன்புத் தாய்தந்தைக்கு மகனிப்பித்தன்,
படைக்கிறேன் காணிக்கை உன்மிகு பாசத்தால்.

அன்பு மகன் – பெ. சிவராமன் எம்.ஏ.,