எழுத்துகள் உதயம்

உலக நாடுகளில் தோன்யுள்ள மொழிகளும், எழுத்துக்களும், வரலாற்றுச் சிறப்புக்களும், ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள் என்ற தாயீன்ற குழந்தைகளே! ஆற்றுச் சமவெளி அல்லது ந்திச் சமவெளி நாகரிகங்களின் வாயிலாக, மனிதனை, அவன் யார்? எத்தொழில் செய்தான்? எம்மொழியாற்றினான்? பண்பாடு என்ன? கலாச்சாரம் யாது? எவ்வுணவுண்டான்? ஒரு மொழியாற்றினான் என்றால் அம்மொழி எவ்வாறு உருவானது? இப்படிப் பல வினாக்களுக்கு விடையைக் காண்கிறோம். திரு.ஜி. வெல்ஸ் என்ற அறிஞரின் கூற்றினின்படி “நாகரிகத்தின் தொட்டில்கள்” என்ற பெரும்பேர் பெற்றுப் போற்றப்படுகிறது.
அவைகள்:-

அ. நைல் நதி நாகரிகம் அல்லது எகிப்திய நாகரிகம்.
ஆ. சுமேரியன் – மெசபடோமிய நாகரிகம்
இ. சிந்துச்சமவெளி நாகரிகம். – மொகஞ்சதாரோ, அரப்பா – திராவிட நாகரிகம்.
ஈ. மஞ்சளாற்றுச் சமவெளி நாகரிகம் அல்லது சீன நாகரிகம்.

இது போன்ற நாகரிகங்கள், அனைத்து வரலாறுகளையும் படைக்கப் பேருதவியாகிறது. உலகெங்கும் நாகரிகம், ஆற்றுச் சமவெளிகளில் மனிதனை ஓரிடத்திலிருந்து உழவுத் தொழிலை மேற்கொண்டு, நிலையாக வாழ வழிவகுத்துத் தந்தது. உழவின் விளைவே நாகரிகம். இந்த நாகரிகங்களை, மொழிகள் தோன்ற வித்திட்ட தந்தை என்றே கூறலாம்.

1. நைல்நதி நாகரிகம் அல்லது எகிப்திய நாகரிகம்


நைல் நதி நாகரிகத்தின் கூற்றின் படி எகிப்தியர் முதன் முதலில் நிலைத்து வாழ ஆரம்பித்த இடம் எகிப்து. அதாவது நைல் நதிச் சமவெளி. எகிப்தியர்கள் தங்களை வாழவைத்த தெய்வமாக நைல் நதியைக் கருதுகின்றனர். இங்கு கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு சிறந்த நாகரிகம் இருந்தது.

பரோக்கள் என்று அழைக்கப்படும் ஆட்சியும் நடந்தது. “சாவுக்குப் பின் என்ன”? என்ற பெரும் தத்துவத்தை உலகில் முதன் முதலில் எழுப்பியவர்கள் எகிப்தியர்கள். கல்விமுறை, வானநூல், கணிதம், மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் முதன் முதலில் புகுந்தவர்கள் இவர்களே!

எகிப்தியவர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் தங்கள் சிந்தனைகளையும், அனுபவங்களையும் அழியாமல் பாதுகாக்கவும் முதன் முதலில் எழுத்துக்களைக் கண்டறிந்தனர். இவர்களின் எழுத்து சித்திர வடிவங்களைக் கொண்டது. இவ்வெழுத்துக்களை “ஹிரோகிளிபிக்ஸ்” என்றும் கூறுவர். எகிப்தியவர் முதன் முதலில் பேபரஸ் என்ற நாணல் தண்டிலிருந்து காகிதம் செய்து அவற்றில் எழுதியும் படித்தும் வந்தனர். காகிதத்தில் எழுதும் பழக்கத்தை உருவாக்கினர்.

2. சுமேரியர் நாகரிகம் அல்லது மெசபடோமிய நாகரீகம்


சுமேரியர் நாகரிகத்தைக் கண்டவர்கள் கிரேக்கர்கள். யூப்ரடிஸ், டைகரிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே மெசபடோமியா எனப்படும். முதன் முதலில் கருத்து வடிவான எழுத்து முறையை உலகுக்கு அளித்த பெருமை சுமேரியர்களையே சாரும். ஈரமான களிமண் பலகைகளின் மீது கூரிய கருவியின் உதவியால் “ஆப்பு” வடிவமான எழுத்துக்களை அமைத்தனர். இவ்வெழுத்து முறைக்கு “கியூனிபார்ம்” என்று பெயர். சுழலும் சக்கரத்தைக் கண்டறிந்து, வணிகப் பத்திரங்களை அமைத்தனர். மேலும், செம்மைப் படுத்தப்பட்ட எழுத்து முறையையும், நூல் நிலையங்களையும் உருவாக்கினர். காலத்தை 60 நொடிகளாகப் பிரித்தது, போன்றவைகளை கண்டறிந்தவர்கள் சுமேரியர்களே!

3. சிந்துச் சமவெளி நாகரிகம் அல்லது திராவிட நாகரிகம்


ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துநதிச் சமவெளியில் ஒரு சிறந்த நாகரிகம் “மொகஞ்சதாரோ,” “அரப்பா” என்ற இரு இடங்களில் தோன்றியது. இந்நாகரிகத்தின் கதாபாத்திரங்கள் திராவிடர்களே! திரு. வெ. ஹீராஸ் அவர்களின் கூற்றின்படி சிந்து நதிச்சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழியும் எழுத்தும் திராவிடர்களின் படைப்பே! அதே கருத்தை அறிஞர்கள் திரு.சர். ஜான் மார்சல், திரு.ஜி.எம். போங்கார்டுலெவின் மற்றும் திரு.என்.வி.குரோ ஆகியோர், மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா நாகரிகம் ஆதிதிராவிடப் பழங்குடியினருக்குச் சொந்தமானது என வலியுறுத்துகிறார்கள்.

தொன்மையில் வாழ்ந்த ஆதிதிராவிட மக்கள் “தென்பிராமி அல்லது தமிழ்ப்பிராமி” என்ற மொழியையும் எழுத்தையும் கையாண்டனர். பிராமி எழுத்துக்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்த எழுத்து முறையாகும். இந்தத் தமிழ்ப்பிராமி அல்லது தென்பிராமி எழுத்து முறைதான் இந்திய மொழிகளின் எழுத்து முறைக்கு வித்திட்ட முதற்பெரும் வித்தகனாய்க் கருதுகிறார் தொல் எழுத்தறிஞர் திரு பூலர் அவர்கள். அவற்றை விரிவாகப் பின் நோக்குவோம்.

4. மஞ்சளாற்றுச் சமவெளி நாகரிகம் அல்லது சீனநாகரிகம்


சீன நாட்டையும் மக்களையும் உலகிற்கு, அடையாளம் காட்டுவது மஞ்சளாற்றுச் சமவெளி நாகரீகமே! மஞ்சள் நிறமுள்ள வண்டல் மண்ணை அடித்து வந்து பரப்பியதால் மஞ்சளாறு என்று பெயர் பெற்றது. அந்த ஆற்றின் உண்மைப் பெயர் “ஹொவாங்கோ” என்பதாகும். இந்த ஆற்றங்கரையில் தான் சீன நாகரிகம் மலர்ந்தது.

சீனர்களின் எழுத்துமுறை, ஓவியங்களை ஒத்து இருந்தது. ஓவிய எழுத்துக்கள் எழுதுவதற்கு தூரிகைகளே பயன்பட்டன. சீன எழுத்துமுறை, மொழி, இலக்கியங்கள், அரசாணைகள் அனைத்துமே அரசரால் ஒழங்குபடுத்தப்பட்ட 3300 சித்திர எழுத்துக்களில் அடங்கும். ஐப்பான், கொரியா, வியட்நாம் போன்ற நாட்டு மொழிகள் சீன மொழியின் அடிப்படையில் அமையப் பெற்றவைகளே!

பண்டைக் காலத்தில் சீனர்கள் எழுதுவதற்கு எலும்பைப் பயன்படுத்தினர். பிறகு ஒட்டக முடியினால் ஆன தூரிகைகளைப் பயன்படுத்தினர். இவர்கள் மரப்பட்டைகள், மூங்கில்கள், கந்தல்துணிகள் போன்றவைகளால் காகிதம் செய்யக் கற்றிருந்தனர். மற்றும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தனர்.

உயிரெழுத்து1. ஓருயிரென்றுமே மோருடல் சாரும்
ஓருடலென்றுமே மோருயிரேற்கும்;
இருவரு கொண்டிட்ட வோருயிரில்லை
இருப்பினுமவையோர் உயிரெனக் கொள்ளா!
இருவரி கொள்ளா ஓருயிர் வரியை
உயிரென மொழிதல் தமிழ் மொழி வழக்கு.

2. உயிரினில் குறிலொலி பிறப்பது முதலே
நெடிலொலி குறிலொலி தழுவலுமுறையே
குறிலொலித் தோன்றலின் வரிவடிச் சாயலை
நெடிலொலி வரிவடியேற்பது சிறப்பு
குறிலொத்த குணத்தினை நெடிலென்றுமேற்று
இயம்புதல் என்றும் தமிழ் மொழி மரபு.