முதலெழுத்துக்கள்

முதலெழுத்துக்கள் தொல்காப்பியரின் கூற்றின் படி உயிர் 12, மெய் 18 முப்பதும் முதலே. அதாவது 30ம் முதல் எழுத்துக்கள் தான் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். ஆனால் என் மனம் ஏற்கவில்லை. ஒத்துக்கொள்ள மறுக்கிறது. உண்மைக்குப் புறம்பானதை எதிர்த்து உண்மையை உணர்த்தத் துடிக்கிறது,

எனதாய்வின்படி முதலெழுத்துக்கள் 22 இருபத்தி இரண்டே! உயிரெழுத்துக்கள் – 10 (பத்தும்) மெய்யெழுத்துக்கள் – 12 (பன்னிரெண்டு) ஆக 10 + 12 = 22 (இருபத்திஇரண்டு) எழுத்துக்களை மட்டும் முதலெழுத்துக்கள் என ஏற்கிறேன். தொல்காப்பியரின் முப்பதை (30) முழுமையாக மறுக்கிறேன். ”ங, ண, ழ, ள, ற, ன” இவைகள் முதல் எழுத்துக்களா?