முதல் கட்ட நடவடிக்கைகள்

முதல் கட்ட நடவடிக்கைகள்

1. “ஆ” என்னும் ஆகார உயிர் நெடில் சீர்திருத்தம்

அ-ஆ அ-அர்

“அ” என்னும் வரிவடிவம் அகரக் குறில் ஒலியாக “அ” என முறையாக ஒலிக்கிறது ஆகார நெடிலாக “ஆ” என்னும் வரிவடிவம் ஒலிக்கிறது. நெடில் எனபதை அடையாளம் காட்டவே நெடில் குறியாக “h” கீழ் விலங்கு மாட்டப்பட்டு ஆகார நெடிலாக ஆ என வரிவடிவம் பெற்றிருப்பதை உற்று நோக்குங்கள். மேலும் இத்துடன் புணரும் 18 உயிர்மெய்யெழுத்துக்கள் அனைத்துமே ‘h’ தாங்கி நெடிலாக ஒலிக்கின்றன. ஆகார உயிர்மெய் நெடில்கள் என்னும் ஓரினத்தில் கீழ்விலங்கு மற்றும் துணைக்கால் ‘h’ இரு நெடில் குறிகள் இருப்பது சரியா? தமிழ் மரபு மீறல்களே. ஒன்றை நீக்க வேண்டும்.

1. அகரத்துடன் புணரும் உயிர்மெய்களைக் கவனியுங்கள்.

க் + அ = க
ங் + அ = ங
ஞ் + அ = ஞ
ட் + அ = ட
ண் + அ = ண

இந்த உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் செம்மையாக, சரியான முறையில் அமைந்துள்ளன என்பதை நன்கறிவீர்கள்.

2. ஆகாரத்துடன் புணரும் உயிர் மெய்யெழுத்துக்களை சற்று உற்று கவனியுங்கள்.

க்+ஆ =

இங்கு ஆ என்னும் ஆகார உயிர் நெடில் எழுத்திற்கு நெடில் குறியாக கீழ் விலங்கு மாட்டப்பட்டுள்ளதால் இத்துடன் புணரும் உயிர்மெய்யெழுத்துக்களுக்கும் கீழ்விலங்கு தான் நெடில் குறியாக மாட்டப்படவேண்டும்.

இது தான் உண்மையும் கூட. ஆனால் நெடில் குறியாக ‘h’ துணைக்கால் போடப்பட்டுள்ளது. துணைக்கால் இங்கு வருவதற்கு மெய்யெழுத்துக்கள் “கா” முதல் “னா” வரையுள்ள 18 எழுத்துக்களிலுமே ‘h’ துணைக்கால் நெடில் குறிகளாக அமைந்துள்ளன. ஆகார உயிர்மெய் நெடில்கள் என்னும் ஒரு இன எழுத்துக்களில் “” மற்றும் ‘h’ இப்படி வேறு இரு நெடில் குறிகள் இருக்கலாமா? ஏதாவது ஒன்று நீக்கப்பட வேண்டும்.

இந்தக் குழப்பத்த போக்க ஒரே வழி ஆ என்னும் ஆகார உயிர்நெடில் வரிவடிவில், நெடில் குறியாக பொருத்தப்பட்டுள்ள “” கீழ்விலங்கை நீக்கிவிட வேண்டும். இத்துடன் புணரும் 18 உயிர்மெய்யெழுத்துக்களில் நெடில் குறியாக பயன்படும் ‘h’ துணைக்காலை நெடில் குறியாக அகரக் குறிலாகிய “அ” வுடன்; அ+’h’ = அ’h’ எனப் பொருத்தப்பட வேண்டும்.

சீர்திருத்த முறை அ+ர் = அh

இவ்வாறு மாற்றி அமைப்பதால் குறைகாணா செம்மொழி காணலாம். கணினியுகத்தில் மொழியாள எளிமையாக இருக்கும். மேலும் உயிர் மற்றும் உயிர்மெய்யெழுத்துக்களின் நெடில் குறிகளின் இன ஒழுங்கு கிட்டும்.

உம்

இப்போது நோக்குங்கள். உயிரெழுத்து மற்றும் உயிர் மெய்யெழுத்துக்களின் நெடில் குறிகள் ஒரு நிலைபட்டு, நெடில் குறிகளின் இன ஒழுங்கை காத்து சீர் பெற்றிருப்பது தெளிவாகும்.

2. “ஈ” என்னும் ஈகார உயிர் நெடில் சீர்திருத்தம்

‘இ-ஈ’ ‘இ- இ’

“இ” என்னும் வரிவடிவம் இகர உயிர் குறில் ஒலியாக “இ” என முறையாக ஒலிக்கிறது. ஆனால் “ஈ” என்னும் வரிவடிவம் ஈகார உயிர் நெடிலாக வரிவடிவம் பெற்றிருப்பது ஏற்புடையதல்ல. ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவமாக உள்ளது. “ஈ” இந்த வரிவடிவம் உயிர் நெடிலெழுத்தே அல்ல. ஒரு துணைக்கால் ‘h’ அதாவது இரு முற்றுபுள்ளிகள். ஆக மொத்தம் அது மூன்று குறிகள் சேர்ந்த ஒரு குறிகளின் கூட்டம் தான். எழுத்து என்று பேரேற்று குழப்பத்தை உருவாக்குகிறது.

இகரக் குறிலின் ஒலியைத் தழுவியே ஈகார நெடிலொலி பிறக்கிறது. அவ்வாறே இகரக் குறிலின் வரிவடிவத்தைத் தழுவியே ஈகார நெடிலின் வரிவடிவமும் அமையப்படவேண்டும். அவ்வாறு அமையப்படாமலும் ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவமாய் இருப்பதாலும் “ஈ” என்னும் வரிவடிவை நீக்கிவிட்டு, இகர உயிர்க்குறிலின் சாயலை ஒத்த மாற்று ஈகார நெடிலை அமைப்போம்.

இகரப் புணர்ச்சிகள் ஈ காரப் புணர்ச்சிகள்

க் + இ = கி க் + ஈ = கீ
ங் + இ = ஙி ங் + ஈ= ஙீ
ஞ்+இ=ஞி ஞ்+ஈ=ஞீ
ண்+இ=ணி ண்+ஈ=ணீ

“இ” என்னும் குறிலின் வரிவடிவை அமைத்துக்கொள்ள வேண்டும். ஈகார உயிர் மெய்யெழுத்துக்களின் நெடில் குறியாக அமைந்துள்ள “‘ மேல்விலங்கை “இ”யுடன் “இ” என பொருத்தமாகப்பட்டால் ஈகார நெடில் கிட்டும்.

1. இகரத்துடன் புணரும் உயிர் மெய்யெழுத்துக்களை கவனியுங்கள். இகர உயிர் குறிலுடன் புணரும் உயிர் மெய்யெழுத்துக்கள் இகர உயிர் குறில் குறியின் சாயலைப் பெற்று செம்மையாக, சரியான முறையில் அமைந்துள்ளதை நன்கறிவீர்கள்.

2. ஈகார நெடிலுடன் புணரும் உயிர் மெய்யெழுத்துக்களை சற்று உற்றுக் கவனியுங்கள். ஈகார உயிர் நெடிலுடன் புணரும் உயிரமெய்யெழுத்துக்களில் ஈகார உயிர் நெடிலின் சாயல்கள் உள்ளனவா? இல்லை. உயிர் மெய்களின் நெடில் குறிகளுக்கும் “ஈ” என்ற உயிர் நெடிலின் வரிவடிவிற்கும் எந்தவித்த் தொடர்புகளும் இல்லவே இல்லை. மேலும் ஒலிக்கு ஒவ்வாத வரிவடிவமே இருந்து வருகிறது.

ஆகவே “ஈ” என்னும் ஈகார நெடிலின் வரிவடிவை நீக்கிவிட்டு மாற்று வடிவடிவம் அமைத்தல் அவசியம். எழுத்திலக்கண ரீதியாக, உயிர்க் குறிலொலியைத் தழுவியே உயிர் நெடிலொலி பிறக்கிறது. அவ்வாறே உயிர்க் குறிலின் வரிவடிவைத் தழுவியே உயிர் நெடிலின் வரிவடிவம் அமையப்பட வேண்டும். அதே வேளை நெடில் குறிகளில் ஒற்றுமை நிலவ வேண்டும். “ஈ” என்னும் வரிவடிவம் நீக்கி விடுவோம்.

இவ்வாறு மாற்றி அமைப்பதால் குறைகாணா செம்மொழி காணலாம். கணினியுகத்தில் மொழியாள எளிமையாக இருக்கும். மேலும் உயிர் மற்றும் உயிர்மெய்யெழுத்துக்களின் நெடில் குறிகளில் இன ஒழுங்கை கிட்டும்.

உ.ம்:
க் +இ – கீ

இப்போது நோக்குங்கள். உயிரெழுத்து மற்றும் உயிர் மெய்யெழுத்துக்களின் நெடில் குறிகளின் இன ஒழுங்கைக் காத்து சீர் பெற்றிருப்பது தெளிவாகும்.

3. “ஊ” என்னும் ஊகார உயிர் நெடில் சீர்திருத்தம்

‘உ-ஊ’ ‘உ-உர’

“உ” என்னும் வரிவடிவம், உகரக் குறிலொலியை “உ” என முறையாக ஒலிக்கிறது. ஆனால் ஊகார உயிர்நெடில் ஒலியை மட்டுமே ஒழுங்காக ஒலிக்கிறது; வரிவடிவம் மாபெரும் குற்றத்தை செய்வதோடு மட்டுமல்லாமல் குழப்பத்தையும், அய்யத்தையும் உருவாக்குகிறது.

“ஊ” என்னும் வரி வடிவம், உயிர் எழுத்தா? இல்லை எழுத்துக்களா? அல்லது வார்த்தையா? உயிரெழுத்தென்றால் இரு வரிவடிவம் பெறலாமா? ஓர் உயிர் ஈருடல் புகலாமா? புகத்தான் முடியுமா? உயிரெழுத்து வரிசையில் உயிர் மெய்யெழுத்துக் கலவை வரலாமா? “ள” என்னும் வரிவடிவம் ஊகார உயிர் நெடில் குறியா? நெடில் குறி என்றால் அக்குறி, இத்துடன் புணரும் 18 உயிர்மெய்யெழுத்துக்களிலும் காணப்பட வில்லையே! இப்படி பல அய்யப்பாட்டையும் குழப்பத்தையும் உருவாக்குகிறது. ஆகவே உயிரெழுத்து வரிசையிலிருந்து உயிர்மெய்யெழுத்தாகிய “ள” என்னும் ளகரத்தை முதலில் நீக்கிவிட வேண்டும்.

“ஊ” என்னும் ஊகார நெடிலுள்ள “ள” என்னும் உயிர் மெய்யெழுத்தை நீக்கி விட்டால் “உ” என்னும் உகர உயிர்க்குறில் மட்டுமே மிஞ்சும். நம்மிடம் ஏற்கனவே கைவசமிருக்கும் (3) மூன்று நெடில்குறிகளில் ஏதாவது ஒன்றை உகரக் குறிலுடன் பொருத்தினால் மட்டுமே போதும். நமக்கு ஊகார உயிர்நெடில் கிட்டிவிடும்.

நம்மிடம்: 1. “h’ துணைக்கால் ஒரு நெடில் குறி.
2. “P” மேல்விலங்கு ஒரு நெடில் குறி.
3. “N” இரட்டைக்கொம்பு ஒரு நெடில் குறி